சென்னையில் ஓசியில் இடியாப்பம் தராத இளைஞரை அடித்து, உதைத்த காவல்துறையினர்
காசில்லாமல் இடியாப்பம் கேடு தராத இளைஞரை காவலர் ஒருவர் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது இருக்கும் இந்த சமூக வலைதளங்களில் எந்த ஒரு பிரச்சனையாக இருந்தாலும் நேரடியாக வீடியோவாக எடுக்கப்பட்டு பதிவாக்கி உண்மை என்ன என்பதை மக்களுக்கு தெரியப்படுத்தி வருகின்றனர் அந்த வகையில் பாலிமர் தொலைக்காட்சியில் சார்பாக வெளியிடப்பட்ட வீடியோவில் இடியாப்பம் விற்பனை செய்யும் இளைஞர் ஒருவருடன் காவல்துறை அதிகாரி ஒருவர் காசு இல்லாமல் இடியாப்பம் செய்துள்ளார். அதற்கு அவர் தர மறுத்துவிட்டார். இதன் காரணமாக கோபமடைந்த காவலர் அந்த இளைஞரை தாக்கிய சம்பவம் தொடர்பான வீடியோ தான் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக முதல்வராக மு க ஸ்டாலின் அவர்கள் பொறுப்பு ஏற்ற பிறகு தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு குறித்து பல்வேறு பிரச்சினைகள் அரங்கேறி வருகின்றன. அந்த வகையில் தி.மு.க கழக தொண்டர்கள் நடத்திய வன்முறை சம்பவங்கள் தமிழகத்தில் பல உள்ளன. அந்த வகையில் சமூக வலைத்தளங்களில் வெளியான இந்த வீடியோ காட்சிகள் தற்போது தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
காவலர் அவருக்கு இலவசமாக இடியாப்பம் தராத அந்த இளைஞரை காவலர் அடித்து உதைத்து இழுத்துச் செல்லும் காட்சிகள் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் தற்போது சென்னை ஜமீன் பல்லாவாரத்தில் ஓசியில் இடியாப்பம் கேட்டு தராத ஆத்திரத்தில் கடையை நடத்தி வரும் இளைஞர்களை காவல்துறையினர் அடித்து உதைத்து இழுத்த சென்ற காணொளி தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
Input & Image courtesy: Polimer News