கொரோனாவால் இந்திய பொருளாதார வளர்ச்சி 2020 - 21 நிதி ஆண்டில் பெரிய அடிவாங்கும், 1.5 % முதல் 2.8% ஆக இருக்கும் - உலக வங்கி கணிப்பு!

கொரோனாவால் இந்திய பொருளாதார வளர்ச்சி 2020 - 21 நிதி ஆண்டில் பெரிய அடிவாங்கும், 1.5 % முதல் 2.8% ஆக இருக்கும் - உலக வங்கி கணிப்பு!

Update: 2020-04-13 05:19 GMT

கொரோனா வைரசால் இந்தியாவின் பொருளாதாரம் 1991 ஆம் ஆண்டிற்கு பிறகு  முன்னெப்போதும் இல்லாத வகையில் பெரும் இழப்பை சந்திக்கும் என உலக வங்கி தெரிவித்துள்ளது. மார்ச் 31 ஆம் தேதியுடன் முடிவடைந்த 2019-20 நிதியாண்டில் இந்தியா 4.8 சதவீதம் முதல் 5 சதவீதம் வரை வளர்ச்சி என்று மதிப்பிட்டுள்ளது.

இந்தியாவின் பொருளாதாரம் ஏற்கனவே மந்தமாக இருக்கும் நிலையில் தற்போது கொரோனா வைரஸ் காரணமாக இந்தியாவில் ஊரடங்கு, பெரும் நிறுவனங்கள் மூடல், வணிக நிறுவனங்கள் மூடல், விமான ரயில் சேவை நிறுத்தப்பட்டு இருக்கும் நிலையில், இந்திய பொருளாதார வளர்ச்சி 2020 - 21 நிதி ஆண்டில் 1.5 % முதல் 2.8 % ஆக இருக்கும் என தெற்காசியா பொருளாதார அறிக்கையில் உலக வங்கி கணித்துள்ளது. அதேபோல 2021- 22 ஆம் நிதி ஆண்டில் இந்தியா பொருளாதாரம் 5% வளர்ச்சி அடையும் என தெரிவித்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமை உலக வங்கி வெளியிட்டு எட்டு நாடுகளை உள்ளடக்கியது தெற்காசியா பொருளாதார அறிக்கை 1.5 % முதல் 2.8% வரை கனிந்துள்ள நிலையில் 6 மாதங்களுக்கு முன்னர் 6.3% ஆக கணித்தது குறிப்பிடத்தக்கது.

Similar News