காவல் நிலையம் அருகிலேயே வெட்டி கொலை செய்யப்பட்ட இளைஞர் - சென்னையில் பட்டப்பகலில் பயங்கரம்

சென்னையில் பட்ட பகலில் தனியார் ஐ.டி நிறுவன ஊழியர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2022-11-19 05:24 GMT

சென்னையில் பட்ட பகலில் தனியார் ஐ.டி நிறுவன ஊழியர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை அயனாவரத்தை சேர்ந்தவர் விவேக், ஐ.டி நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார், இவருக்கு தேவிப்பிரியா என்ற மனைவியும், ஒரு குழந்தையும் உள்ளது. நேற்று காலை விவேக் எழும்பூர் தாசில்தார் அலுவலகத்திற்கு தனது மனைவியை இருசக்கர வாகனத்தில் அழைத்துக் கொண்டு வந்தார்.

பின்னர் அவர் வேலைக்கு செல்ல சென்னை எழும்பூர் காவல் நிலையம் அருகே உள்ள தனியார் நிறுவனத்திற்கு சென்றுகொண்டிருந்தார். அந்த சமயம் எழும்பூர் நெடுஞ்சாலையில் சென்ற விவேக்கை அவருடன் பணியாற்றிய சந்தோஷ் என்ற ஊழியர் வழி மறித்துள்ளார். பின்னர் சந்தோஷ் அவருடன் வந்த சிலர் தங்கள் மறைத்து வைத்திருந்த கத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்களால் வெட்டினார்.

இதில் விவேக் நிலை தடுமாறி கீழே விழுந்தார். விவேக்கின் அலறல் சத்தம் கேட்டு அவரது நண்பர் அருண் ஓடிவந்தார், ஆனால் ஆத்திரமடைந்த சந்தோஷ்குமார் அருணையும் வெட்டினார். பட்டப் பகலில் இந்த கொலைவெறி தாக்குதலில் விவேக் உயிரிழந்தார். வெட்டிய சந்தோஷ் மற்றும் அவருடன் வந்தவர்கள் தப்பி ஓடிவிட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பாக காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது, உடனடியாக போலீசார் அங்கு வந்து விவேக் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பட்டப்பகலில் காவல் நிலையத்தின் அருகே தனியா நிறுவன ஊழியர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



Source - Junior Vikatan

Similar News