17 வயது சிறுமியை அழைத்துச் சென்ற முகமது நாசர் - போக்சோ சட்டத்தில் கைது
நாச்சியார் கோவிலில் 17 வயது சிறுமியை அழைத்துச் சென்ற வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமி தஞ்சை மாவட்டம் நாச்சியார்கோவிலில் உள்ள ஒரு கல்லூரிக்கு கடந்த எட்டாம் தேதி படிக்க வந்தார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இது குறித்து அந்த சிறுமியின் பெற்றோர் நாச்சியார் கோவில் போலீசில் புகார் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் திருவாரூர் பகுதியைச் சேர்ந்த முகமது நாசர் என்பவர் அந்த சிறுமியை அழைத்துச் சென்றது தெரியவந்தது. இதை அடுத்து போக்சோ சட்டத்தில் முகமது நாசரரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அந்த சிறுமியை மீட்டு அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.