₹120 கோடி கணக்கில் வராத சொத்துக்கள், 5 கிலோ தங்கம்: காருண்யா பல்கலைக்கழகத்தில் கண்டுபிடிப்பு.!

₹120 கோடி கணக்கில் வராத சொத்துக்கள், 5 கிலோ தங்கம்: காருண்யா பல்கலைக்கழகத்தில் கண்டுபிடிப்பு.!

Update: 2021-01-23 13:27 GMT

கடந்த மூன்று நாட்களாக இயேசு அழைக்கிறார் கிறிஸ்தவ அமைப்பு மற்றும் அதன் உரிமையாளர் பால் தினகரனுக்கு சொந்தமான 28 இடங்களில் சோதனை நடந்து வந்தது. இதன் முடிவில் ₹5கிலோ தங்கம் மற்றும் ₹120 கோடி கணக்கில் காட்டப்படாத முதலீடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்து விசாரணை செய்ய மத போதகர் பால் தினகரனுக்கு வருமான வரித்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

கோவையில் உள்ள காருண்யா பல்கலைக்கழகம், சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இயேசு அழைக்கிறார் அலுவலகம் மற்றும் பால் தினகரனின் வீடு உள்ளிட்ட இடங்களில் நடந்த வருமான வரித்துறை சோதனை இன்று நேற்றுடன் நிறைவடைந்தன. பிற இடங்களில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் காருண்யா பல்கலைக்கழகத்துக்கு கொண்டு வரப்பட்டு ஆய்வு செய்யப்பட்டன.

இதற்காக பால் தினகரனின் தணிக்கையாளர், கணக்காளர் உள்ளிட்டோர் வரவழைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. காருண்யா பல்கலைக்கழகத்தில் நடந்த சோதனையில், அங்குள்ள விருந்தினர் மாளிகையில் இருந்து 5 கிலோ தங்கம் கைப்பற்றப்பட்டதாத தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் ₹120 அளவிலாற முதலீடுகளுக்கு முறையாக கணக்கு காட்டாமல் இருந்ததையும் அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

பால் தினகரன் அவரது குடும்பத்தினருடன் கனடாவில் இருப்பதாக தகவல் வெளியான நிலையில், அடுத்த வாரம் சென்னையில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகுமாறு அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. வரி ஏய்ப்பு செய்ததாகவும் வெளிநாடுகளிலிருந்து பெறும் நிதியியல் முறைகேடுகள் நடப்பதாகவும் வந்த புகாரின் அடிப்படையில் கடந்த புதன்கிழமை அதிகாலையில் வருமான வரித்துறை சோதனையைத் தொடங்கியது குறிப்பிடத்தக்கது. 

Legal Rights Observatory (LRO) என்ற தன்னார்வ அமைப்பு இந்தியாவில் மட்டுமல்லாது உலக அளவில் பல இடங்களில் பால் தினகரன் அசையா சொத்துக்களை வாங்கி இருப்பதாகவும் அந்த வகையில் முறைகேடுகள் நடந்து இருக்கின்றனவா என்று ஆராயவேண்டும் என்று வருமான வரித்துறைக்கு கடிதம் எழுதி இருந்தது. மேலும் அவர் நடத்தும் கல்வி நிறுவனங்கள் அனாதை இல்லங்கள் உள்ளிட்டவற்றுக்கு பெரும் நிதியிலும் முறைகேடுகள் நடப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

Similar News