"போங்க போய் அங்கீகரிக்கப்பட்ட கட்சி அந்தஸ்தை வாங்குங்க அப்புறம் பேசலாம்" என சிறுத்தைகளை இடது கையால் டீல் செய்த எஸ்.ஜி.சூர்யா!

Update: 2021-04-27 03:00 GMT

மீண்டும் ஸ்டெர்லைட் ஆலையை கொரோனோ கால ஆக்ஸிஜன் தேவைக்காக திறக்க வேண்டும் என தமிழகத்தில் அனைத்து அரசியல் கட்சிகளின் சார்பில் முதல்வர் எடப்பாடி தலைமையில் நடந்த கூட்டத்தில் ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது. இதனைதொடர்ந்து தூத்துக்குடியில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் குறுகிய காலம் ஆக்ஸிஜன் உற்பத்தி துவங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து மூன்று தினங்கள் முன் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தனது ட்விட்டர் பதிவில், "மோடி அரசே, மக்களின் உணர்வுகளைப் புறந்தள்ளாதே. ஆக்ஸிஜன் தாயாரிப்பதாகச் சொல்லி ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க முயற்சிக்காதே.

'ஆயிரம்பேர் செத்தாலும் ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கவிடமாட்டோமென' கட்டியம் கூறும் உழைக்கும் மக்களின் போர்க்குரல் ஆளுவோரின் செவிப்பறையைக் கிழிக்கட்டும்" என பதிவிட்ட இரு தினங்களில் அனைத்து கட்சி கூட்டத்தில் மீண்டும் ஆலையை திறக்கலாம் என முடிவு எடுக்கப்பட்டதை தொடர்ந்து மீண்டும் இந்த விவகாரத்தில் திருமாவளவன் கருத்து தெரிவிக்கும் வகையில் "#ஸ்டெர்லைட் ஆலையில் #ஆக்சிஜன் உற்பத்திக்கு அனுமதி - அனைத்துக்கட்சிகள் கூட்டத்தில் முடிவு!

முரணான இம்முடிவை ஒவ்வாமையுடன் ஏற்கிறோம்!

ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக திறக்கப்படுவதற்கு இது வழிவகுத்து விடக்கூடாது" என பதிவிட்டுள்ளார்.

மேலும், ஸ்டெர்லைட் விவகாரம்: அங்கீகரிக்கப்படாத கட்சிகளுக்கு ஏன் அழைப்பில்லை? என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பா.ஜ.க'வின் செய்தி தொடர்பாளர் எஸ்.ஜே.சூர்யா பதிலளிக்கும் விதமாக "முதலில் அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக அந்தஸ்தை பெறுங்கள்" என பல்டி அடிக்கும் விதமாக பதிவிட்டுள்ளார்.

இதனை தனது ட்விட்டர் பதிவில் கடந்த பத்து ஆண்டுகால விடுதலை சிறுத்தைகள் தேர்தல் முடிவுகளுடன் ஒப்பிட்டு குறிப்பிட்டுள்ளார் எஸ்.ஜே.சூர்யா.

அதில், "ஸ்டெர்லைட் விவகாரம்: அங்கீகரிக்கப்படாத கட்சிகளுக்கு ஏன் அழைப்பில்லை? - திருமாவளவன்

2011 சட்டசபை தேர்தல்: 0/234

2014 பாராளுமன்ற தேர்தல்: 0/39

2016 சட்டசபை தேர்தல்: 0/234

2019 பாராளுமன்ற தேர்தல்: 1/39(1 தி.மு.க சின்னத்தில் போட்டி)

முதலில் அங்கீகரிக்கப்பட்ட கட்சி அந்தஸ்தை பெறவும்." என குறிப்பிட்டுள்ளார்.

இதனைதொடர்ந்து சமூகவலைதளங்களில் "அப்ப விடுதலை சிறுத்தைகள் தமிழகத்தில் அங்கீகரிக்கப்பட்ட கட்சி இல்லையா?" என்கிற ரீதியில் கமெண்ட்'டுகள் பறந்து கொண்டிருக்கின்றன.

Similar News