என் மண் என் மக்கள் யாத்திரை மீண்டும் நடைபெறுமா? தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை முடிவு..

Update: 2024-10-21 02:55 GMT

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் தலைமையில் நடைபெற்று முடிந்த என் மண் என் மக்கள் யாத்திரை சிறப்பாக நடைபெற்று முடிந்து இருக்கிறது. அண்ணாமலை அவர்கள் தற்பொழுது அமெரிக்காவில் குறுகிய கால அரசியல் படிப்பை பயின்று வருகிறார். அவர் இந்திய திரும்பிய பிறகு தமிழ்நாட்டில் மீண்டும் என் மண் என் மக்கள் யாத்திரை துவங்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக பாஜக சார்பில் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. தமிழக சட்டசபை தேர்தல் 2026ல் நடக்க உள்ளது. அதற்கு அனைத்து கட்சிகளும் தயாராகி உறுப்பினர் சேர்க்கையை தீவிரமாக நடத்துகிறது. அண்ணாமலை இல்லாத நிலையில் மூத்த தலைவர் எச்.ராஜா ஒருங்கிணைப்பு தலைவராக இருந்து கட்சியை வழிநடத்துகிறார்.


கடந்தாண்டு பருவ மழை காலத்தில் அண்ணாமலை 18 பேர் கொண்ட குழுவை அமைத்து மக்களின் கவனத்தை ஈர்த்தார். அதுபோல அவர் மீண்டும் பொறுப்பேற்ற பின் பரபரப்புகளை ஏற்படுத்தி கட்சி துடிப்புடன் இருக்க வேண்டும் என எண்ணுகிறார். இதற்காக மீண்டும் என் மண் என் மக்கள் போன்ற ஒரு யாத்திரையை நடத்தி தமிழக மக்களை சந்திக்க எண்ணுகிறார்.

2025 ஏப்ரலில் யாத்திரை துவங்கி செப்டம்பருக்குள் முடித்து விட வேண்டும். அதற்கான தீவிரப் பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் அமெரிக்காவில் இருந்த தமிழகத்திற்கு திரும்பிய பிறகு, அண்ணாமலை அவர்கள் தமிழக அரசியலில் புதிய ஒரு மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான யாத்திரையில் மீண்டும் துவங்க இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

Input & Image courtesy: News

Tags:    

Similar News