ஹரியானா மாநிலத்தில் பா.ஜ.க ஹாட்ரிக் வெற்றி.. மக்களுக்கு ராயல் சல்யூட் கூறிய பிரதமர்..
நடைபெற்ற முடிந்த தேர்தலில் தற்பொழுது ஹரியானா மாநிலத்தில் பாஜக ஹாட்ரிக் வெற்றி பெற்று இருக்கிறது. ஹரியானா தேர்தலில் வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி தந்த மக்களுக்கு எனது சல்யூட் என தேர்தல் முடிவுகள் குறித்து பிரதமர் மோடி தன் பாராட்டை தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த காஷ்மீர், ஹரியானா சட்டசபை தேர்தலில் நடந்த வாக்கு எண்ணிக்கையில், காஷ்மீரில் பரூக் அப்துல்லாவின் தேசிய மாநாடு கட்சி, காங்., கூட்டணி ஆட்சி அமைகிறது. ஹரியானாவில் மீண்டும் பா.ஜ., ஆட்சி அமைகிறது.
இத்தேர்தல் முடிவுகள் குறித்து பிரதமர் மோடி தனது ‛எக்ஸ்' தளத்தில் கூறி இருப்பதாவது, பெரும்பான்மையுடன் மூன்றாவது முறையாக ஹரியானா தேர்தலில் ஹாட்ரிக் வெற்றி பெற்றுள்ளதன் மூலம் பா.ஜ.,வின் நல்லாட்சிக்கு கிடைத்த வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி. ஹரியானா மக்களின் தேவைகளை நிறைவேற்ற உறுதி அளிக்கிறேன். இத்தேர்தல் வெற்றிக்காக உழைத்தவர்களுக்கும், ஹரியானா மக்களுக்கும் எனது சல்யூட்,
அதே நேரம் காஷ்மீரில் 370 சட்டப்பிரிவு நீக்கப்பட்ட பின் எதிர்பார்த்தைவிட ஓட்டுப்பதிவு சதவீதம் அதிகரித்துள்ளது. மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்துள்ளனர். பா.ஜ.,வும் சிறப்பாக பணியாற்றியுள்ளது. இதன் மூலம் காஷ்மீர் மக்கள் ஜனநாயகத்தின் மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர் என்பது இதன் மூலம் தெளிவாகிறது என பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் குறிப்பிட்டு பேசியிருக்கிறார்.
Input & Image courtesy: News