"இதை நம்பலாமா? இல்லை போன தடவை போல் காலை வாரிவிடுமா?" என எக்ஸிட் போல்" முடிவுகள் பற்றிய பயத்தில் தி.மு.க!

Update: 2021-04-30 02:15 GMT

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6ம் தேதி ஒரே கட்டமாக 234 தொகுதிகளுக்கும் சட்மன்ற தேர்தல் நடந்து முடிந்ததது. இதனைதொடர்ந்நு வரும் மே 2ம் தேதி அதாவது இன்னும் இரு தினங்களில் தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கும் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இந்த நிலையில் நேற்று மாலை 7 மணியளவில் இந்திய அளவில் பெருவாரியான ஊடகங்கள் "எக்ஸிட் போல்" எனப்படும் கருத்துக்கணிப்புகளை வெளியிட துவங்கிவிட்டன. இதில் தமிழகத்தில் உள்ள ஊடகங்களும் அடக்கம்.

இவ்வாறு வெளியிடப்பட்ட கருத்து கணிப்புகள் தமிழகத்தில் தி.மு.க பத்து ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியமைக்கும் என கூறப்பட்டுள்ளன. இதனை கேள்விப்பட்ட தி.மு.க உடன்பிறப்புகள் உற்சாகத்தில் ஆர்ப்பரிக்கின்றனர். ஆனால் கடந்த 2016ம் ஆண்டும் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் இதே போல் தி.மு.க வெற்றி பெறும் என கருத்துகணிப்புகள் ஆசை காண்பித்து கடைசியில் முடிவுகள் அ.தி.மு.க'வே வெற்றி பெற்றது, தி.மு.கவின் கொண்டாட்டங்கள் கானல் நீராகிப்போகின.

இந்த நிலையில் நேற்று வெளியாகிய கருத்து கணிப்பு முடிவுகள் தி.மு.கவை வெற்றி பெறும் என கூறினாலும் எங்கே கடந்த தேர்தலைப்போல் இது காலை வாரிவிடுமோ என அறிவாலய வட்டாரங்கள் பதபதைப்புடன் இருப்பதாக தகவல்கள் வருகின்றன.

காரணம் கடந்த 2016 சட்டமன்ற தேர்தல் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகளில், `இந்தியா டுடே- ஆக்ஸிஸ்' அதிமுகவுக்கு 89 – 101 இடங்களும், திமுக கூட்டணிக்கு 124 – 140 இடங்களும் கிடைக்க வாய்ப்பிருப்பதாக தெரிவித்தன. ஆனால் முடிவுகளோ அப்படியே நேரெதிராக அமைந்தன.

காரணம் 'எக்ஸிட் போல்' எனப்படுபவை மூத்த பத்திரிக்கையாளர்களின் தேர்தல் வரலாற்று முடிவுகளை பற்றிய அலசல்கள். சில வாக்காளர்களிடம் எடுத்த முடிவுகள், கூட்டணி நிலைப்பாடுகள், தொகுதி நிலவரங்கள் என குறிப்பிட்ட சில விஷயங்களை கணித்து அதன் முடிவுகளாக வருவனவற்றை கருத்து கணிப்புக்களாக வெளியிடுகின்றன.

ஆனால் தேர்தல் என்பது மாநகரம் முதல் கடைகோடி கிராமம் வரை மக்களின் மனநிலையை பிரதிபலிப்பதாக உள்ளதால் அதன் முடிவுகள் கருத்து கணிப்புகளுக்கு அப்பாற்பட்டு உள்ளன. இதுவே தி.மு.கவிற்கு முடிவுகள் நேரெதிராக கடந்த முறை கருத்து கணிப்பு முடிவுகள் மாற காரணம்.

இந்த முறையும் தி.மு.க ஆட்சியமைக்கும் என கருத்து கணிப்புகள் வெளிவரும் நிலையில் இதனை நம்பலாமா? வேண்டாமா? என தி.மு.க குழப்ப மனநிலையில் உள்ளது தெளிவாக தெரிகிறது.

Similar News