திருவாரூரில் அதிரடியாக முதல் விடியல் - மின் மயானத்தை துவக்கி வைத்த பூண்டி கலைவாணன்!

Update: 2021-05-20 07:00 GMT

திருவாரூர் எம்.எல்.ஏ பூண்டி கலைவாணன் திருவாரூரில் எம்.எல்.ஏ'வாக பொறுப்பேற்று முதலாக மின் மயானத்தை சரி செய்து மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளார்.


திருவாரூர் தஞ்சை மெயின்ரோடு கல்பாலம் அருகே பழைய தஞ்சை சாலை மற்றும் நெய்விளக்கு பகுதியில் சுடுகாடுகள் உள்ளன. இதில் நெய்விளக்கு தோப்பில் உள்ள சுடுகாடு அதிக அளவில் பயன்பாட்டில் இருந்து வருகிறது. இங்கு நகராட்சி சார்பில் ₹40 லட்சம் மதிப்பில் நவீன எரிவாயு தகன மேடை அமைக்கப்பட்டது.

இந்த தகனமேடை பல்வேறு காரணங்க ளால் பல ஆண்டுகளாக பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட வில்லை. தற்போது கொரோனா நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களை தகனம் செய்வதற்கு சிரமங்கள் ஏற்பட்டது. இதை சரி செய்வதற்காக திருவாரூர் தி.மு.க எம்.எல்.ஏ பூண்டி கலைவாணன் நேற்று முன்தினம் எரிவாயு தகன மேடையை பார்வையிட்டு, பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுத்தார். அதன்படி நகராட்சி ஆணையர் (பொறுப்பு) சண்முகம், துப்புரவு அலுவலர் ராமச்சந்திரன் ஆகியோர் எரிவாயு தகன மேடையை பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான பணிகளை செய்தனர். இந்த நடவடிக்கைகள் காரணமாக நேற்று முதல் எரிவாயு தகன மேடை பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

திருவாரூர் பகுதியில் போக்குவரத்து நெரிசல், சாலை வசதி, நீர்நிலைகள் தூர்வாரப்படாமல் அவல நிலையில் இருப்பது போன்ற பிரச்சினைகள் இருக்கின்றன. திருவாரூர் எம்.எல்.ஏ இதனையும் சரி செய்தால் நல்லது என மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இதற்கு முன்பும் இந்த பூண்டி கலைவாணன் அவர்கள் தான் எம்.எல்.ஏ என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News