"நீங்க ஊர் சுத்துறீங்க மக்கள் சுத்த கூடாதா?" - பத்திரிக்கையாளர்களை விளாசிய தி.மு.க அமைச்சர் நாசர்!

Update: 2021-05-22 03:00 GMT

"ஊரடங்கை மதிக்காமல் மக்கள் ஊர் சுற்றுகிறார்கள் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?" என கேட்டதற்கு "நிரூபர்கள் நீங்க சுத்துறீங்க, அதுமாதிரி அவங்களும் சுத்துறாங்க" என்கிற ரீதியில் அதிசய பதிலை பால் வளத்துறை அமைச்சர் நாசர் கூறியது பத்திரிக்கையாளர்களை எரிச்சலடைய செய்துள்ளது.

திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில், கொரோனா நோய் தடுப்பு குறித்த ஆலோசனை கூட்டம் சமீபத்தில் நடந்தது. இதில், பால்வளத் துறை அமைச்சர் நாசர் பங்கேற்றார்.


பின், நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். 'அரசின் ஊரடங்கு உத்தரவை மதிக்காமல், காலை, 10:00 மணிக்கு மேல், பலரும் சாலையில் கூட்டமாக செல்கின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?' என, நிருபர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்த அமைச்சர் நாசர், 'நிருபர்களே வீட்டில் இருக்காமல், பேட்டியெடுக்க இங்கு வந்துள்ளீர்கள்... இதே போல், அவர்களும் ஏதா வது காரணத்திற்காசு வந்திருப்பாங்க...' என அலட்சியமாக கூறினார்.

இதை கேட்ட மூத்த நிரூபர் ஒருவர், 'ஊடகத் துறையினர், எப்போதுமே அத்தியாவசிய பணியா ளர்கள்... இப்போ முன்கள பணியாளர்கள்னு அரசே அறிவிச்சிருக்கு.... இந்த அடிப்படை கூட அமைச்சருக்கு தெரியல... மக்கள் ஊர் சுத்து றதுக்கு, இவரே காரணம் சொல்லுறார்... அப்புறம், கொரோனா பரவுவதை எப்படி தடுக்க முடியும்?' என்றதும், சுற்றியிருந்தோர் அதை ஆமோதித்தனர்.

ஒரு அமைச்சரே இதுபோல் அடிப்படை தெரியாமல் இருந்தால் அப்புறம் கொரோனோ எண்ணிக்கை ஏறாமல் என்ன செய்யும் என அங்கிருந்தவர்கள் புலம்பினர்

Source - தினமலர் 

Similar News