"தேவையெனில் முழு ஊரடங்கு நீடிக்க வாய்ப்பு" - அடுத்த குண்டை போட்ட தமிழக முதல்வர்!

Update: 2021-05-26 08:30 GMT

தேவைப்பட்டால் தளர்வில்லா முழு ஊரடங்கு நீட்டிக்கப்படலாம் என தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கொரோனோ இரண்டாம் அலையால் தமிழகம் தற்பொழுது முழு ஊரடங்கின் அடிப்படையில் இயங்கி வருகிறது. கடந்த திங்கள் முதல் தளர்வில்லா முழு ஊரடங்கை தமிழக அரசு அமல்படுத்தியது இருப்பினும் தமிழகத்தில் தினமும் 35 ஆயிரத்திற்கும் குறையாமல் புதிதாக கொரோனோ தொற்று நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

திருவள்ளூரில் நேமம் வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை ஆய்வு செய்தபிறகு பத்திரிகையாளர்களை தமிழக முதல்வர் ஸ்டாலின் ஊரடங்கு மற்றும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பகிர்ந்துக் கொண்டார். அவர் கூறியதாவது "தளர்வில்லா ஊரடங்கால் கடந்த 2 நாட்களாக நல்ல பலன் கிடைத்து வருகிறது. முழு ஊரடங்கின் பலன் அடுத்த 2, 3 நாட்களில் தெரிய தொடங்கும். கொரோனா பரவல் சங்கிலியை உடைக்கவே முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் முழு ஊரடங்கை கடைபிடித்து வீட்டிலேயே இருக்க வேண்டும்."

மேலும், முழு ஊரடங்கு நீட்டிக்கப்படுமா என்ற கேள்விக்கு "தேவைப்பட்டால் நீட்டிக்கப்படும். கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் சட்டமன்ற குழுவின் பரிந்துரை குறித்து ஆலோசித்து பின்னர் முடிவு எடுக்கப்படும்" என்று ஸ்டாலின் பதிலளித்தார்.

Similar News