"அது கொரோனோ வார்டே இல்லையாம்" - முதல்வர் ஸ்டாலினின் கோவை விசிட் களேபரங்கள்
நேற்று கோவையில் முதல்வர் ஸ்டாலின் பி.பி.இ கிட்ட அணிந்து பார்வையிட்டது கொரோனோ வார்டு இல்லை என தகவல் வெளியாகியுள்ளது.
கோயமுத்தூர் இ.எஸ்.ஐ மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று கொரோனோ வார்டை பி.பி.இ கிட் அணிந்து கொண்டு பார்வையிட்டார், முதன் முதலில் ஒரு முதல்வர் பி.பி.இ கிட் அணைந்து கொண்டு பார்வையிடுகிறார் என தி.மு.க'வினர் செய்திகளை பரப்பி வந்தனர்.
இந்த நிலையில் ஸ்டாலின் மருத்துவமனையில் பார்வையிட சென்றது கொரோனோ நோயாளிகள் சிகிச்சை பெறும் வார்டு அல்ல கொரோனோ'வில் இருந்து மீண்டவர்கள் மருத்துவ கண்காணிப்பில் இருக்கும் வார்டு என தகவல்கள் வெளியாகின. இந்த வார்டில்'தான் பி.பி.இ கிட் அணிந்து ஸ்டாலின் 10 அடி தொலைவில் நின்று நோயாளிகளை பார்வையிட்டார். இந்த உண்மையைதான் மாற்றி கொரோனோ தி.மு.க'வினர் புகழ்ந்து மக்களிடம் செய்திகளை பரப்பி வந்தனர்.
மேலும் அவர் அந்த வார்டில் சிறுது நேரம் தூரமாக இருந்து குணமாகிய நோயாளிகளை பார்வையிட்டுவிட்டு சில புகைப்படங்கள் எடுக்கப்பெற்றதும் போன்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.
Source - News J