பேருந்துகளை இயக்கி மாநிலம் முழுக்க கொரோனாவை பரப்பிய தமிழக அரசு - எல்.முருகன் தாக்கு!

Update: 2021-05-31 04:45 GMT

"கொரோனா பரவலுக்கு தமிழக அரசு எடுத்த நடவடிக்கை தான் காரணம்" என தி.மு.க அரசின் மீது தமிழக பா.ஜ.க தலைவர் எல்.முருகன் குற்றம் சாட்டியுள்ளார்.

மத்தியில் பா.ஜ.க அரசு இரண்டாவது முறையாக பதவியேற்று இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி நேற்று தமிழகம் முழுவதும் பா.ஜ.க கட்சியினர் சேவை தினமாக கொண்டாடப்பட்டு வந்தது. இதன் ஒரு பகுதியாக சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ஏழை குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன. இதில் பா.ஜ.க மாநிலத்தலைவர் எல்.முருகன் கலந்துகொண்டு நிவாரண பொருட்களை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எல்.முருகன் கூறியதாவது "சென்னையில் தற்போது கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டாலும் பிற மாவட்டங்களில் கொரோனா பரவலுக்கு தமிழக அரசு எடுத்த நடவடிக்கை தான் காரணம். ஒரே நாளில் அனைத்து கடைகளும் திறந்து விட்டு பிற மாவட்டங்களுக்கு பேருந்துகளை இயக்கி இங்கு பரவிய நோய் தொற்றினை பிற மாவட்டங்களிலும் பரவ செய்து விட்டதாக குற்றம்சாட்டினார். மேலும் சென்னைக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவத்தை ஏன் பிற மாவட்டங்களுக்கு கொடுக்கவில்லை" என தமிழக அரசுக்கு கேள்விகளை எழுப்பினார்.

Similar News