"தடுப்பூசி டெண்டரை எடுக்க யாரும் வரல" - புலம்பும் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர்!

Update: 2021-06-06 11:30 GMT

"தடுப்பூசி டெண்டரை எடுக்க எந்த நிறுவனமும் முன் வரவில்லை" என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

நீலகிரி மாவட்டத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்காக அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தினார் சுகாதாரத்துறை அமைச்சர் ம.சுப்பிரமணியன். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, "தமிழகத்தில் தற்போது கொரோனா பாதிப்பு என்பது படிப்படியாக குறைந்து வருகிறது. கொரோனா தடுப்பூசி கொள்முதல் செய்வதற்கு உலகளவில் டெண்டர் கோரிய நிலையில் டெண்டரை எடுக்க எந்த நிறுவனமும் முன் வரவில்லை. இது போன்று எந்த நிறுவனங்களும் டெண்டரை பெற முன்வராததற்கு மத்திய அரசுதான் காரணம் என கூறுவது அபத்தமாக இருக்கும். எந்த காணத்தினால் டெண்டர் எடுக்கவில்லை என்று ஆய்வு செய்து மீண்டும் உலகளாவிய டெண்டர் விடப்படும். விரைவில் தமிழகத்திலேயே தடுப்பூசிக்கான உற்பத்திக்கான பணிகள் மேற்கொள்ளப்படும்" என தெரிவித்தார்.

Similar News