"இனி கழகம் வேறு நாங்க வேறு" என அடம்பிடித்த தி.மு.க உ.பிஸ் - சாட்டை துரைமுருகனை கைது செய்த போலீஸ்!

Update: 2021-06-12 04:15 GMT

"போங்கய்யா நீங்களும் உங்க கழகமும், உங்களுக்காக இணையத்துல மணிக்கணக்கா உழைச்சதுக்கு எவன் எவனோ வந்து மிரட்டிட்டு போறான்" என கல்லு மாதிரி இருந்த இணைய உடன்பிறப்புகளையே நேற்று நடந்த ஒரு சம்பவம் புலம்ப வைத்து விட்டது.

சமூக வலைதளத்தில் குறிப்பாக ட்விட்டரில் கடந்த சில நாட்களாக ஈழம், இலங்கை போர் குறித்து விவாதங்கள் நடந்து வருகின்றன. பலதரப்பட்ட கருத்துக்களையும் இணையவாசிகள் பகிர்ந்து வருகின்றனர்.

இந்த நிலையில் திருச்சியில் "சமர் கார் ஸ்பா" என்ற நிறுவன ஊழியர் ஒருவர் செய்த டிவிட் காரணமாக இணையமே நேற்று அல்லோல பட்டது.

பத்து ஆண்டுகளுக்கு முன் இலங்கை ராணுவத்தினரால் கொல்லப்பட்ட எல்.டி.டி.இ தலைவர் பிரபாகரன் குறித்து வினோத் என்பவர் செய்த டிவிட்டின் விளைவாக நேற்று திருச்சியில் அவர் பணியாற்றும் கார் நிறுவனத்திலேயே மிரட்டப்பட்டார். யூ டியூப் பதிவர் துரைமுருகன் மற்றும் சிலர் கூட்டாக சென்று வினோத்தை மன்னிப்பு கேட்கும்படி மிரட்டி உள்ளனர். அதோடு அவரின் அலுவலகத்தின் வெளியே நின்று கூச்சல் எழுப்பி உள்ளனர்.

இந்த விஷயம் இணையத்தில் காட்டுத்தீ போல பரவியது, இதனையடுத்து இணைய உடன்பிறப்புகள் "என்ன நம்ம கழக ஆட்சியில் இப்படி பாதுகாப்பு இல்லையா?" என பொங்க துவங்கி விட்டனர். இதற்கு ஒரு படி மேலே போய், #NoMoreSupportToDMK என்ற ஹேஷ்டேக்கில் ஆயிரக்கணக்கான ட்வீட்டுகளை பதிவு செய்ய துவங்கி விட்டனர்.

இந்த நிலையில், ஊழியரை மிரட்டியதாக வைக்கப்பட்ட புகாரில் யூ டியூப் பதிவர் துரைமுருகன் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வினோத் என்ற கார் நிறுவன ஊழியரை மிரட்டிய சரவணன், வினோத், சந்தோஷ் ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அழுதே சாதித்து விட்டதே தி.மு.க ஐ.டி விங் என கலாய்க்கின்றனர் இணையவாசிகள்.

Similar News