"அது போன வருஷம், இது இந்த வருஷம்!" - டாஸ்மாக் திறப்பு அந்தர்பல்டி தி.மு.க!

Update: 2021-06-12 05:00 GMT

"அது போன வருஷம், இது இந்த வருஷம்" என்கிற ரீதியில் தி.மு.க ஆட்சியின் செயல்பாடுகள் இருக்கின்றன.

குறிப்பாக டாஸ்மாக் விவகாரத்தில் கடந்த ஆண்டு அ.தி.மு.க அரசு டாஸ்மாக் கொரோனோ காலத்தில் திறந்த பொழுது தற்போதைய முதல்வரும், தி.மு.க தலைவருமான ஸ்டாலின் கருப்பு சட்டையுடன் தன்வீட்டு வாசலில் நின்று "ஊரடங்கு காலத்தில் மதுக்கடைகள் எதற்கு என்ற பதாகைகள் ஏந்தி நின்றார்.

அவரின் மகன் உதயநிதியோ "கொரோனோ ஒழிப்பில் தோல்வியடைந்த அ.தி.மு.க அரசு மதுமானக்கடையை திறக்க எதிர்த்து வீட்டு வாசலில் போராட்டம் நடத்தப்படும்" என அறிவித்து கருஞ்சட்டையுடன் நின்றார்.

அவரின் தங்கையும், எம்.பி-யுமான கனிமொழியோ "சென்னையில் கொரோனோ அதிகரிக்கத்தான் டாஸ்மாக் திறப்பா என கொந்தளித்தார்" ஆனால் தற்பொழுது மயான அமைதியில் இருக்கிறார்.

இப்படி கடந்த ஆண்டு தி.மு.க-வினர் மூச்சு முட்ட போராடிய போது கொரோனோ புதிய தொற்றாளர்கள் எண்ணிக்கை தினசரி 5000 ஆயிரம் இருந்தது. ஆனால் தற்பொழுது 15,000 ஆயிரம் இருக்கும் போது வரும் திங்கட்கிழமை முதல் 27 மாவட்டங்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை டாஸ்மாக் திறக்கப்படும் என இதே தி.மு.க அறிவித்துள்ளது. ஏன் கொரோனோ தி.மு.க ஆட்சி என்றால் இரக்கம் காட்டுமா? அந்தர்பல்டி அரசியல் செய்வதில் வல்லவர்கள் தி.மு.க'வினர் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளனர்.

Similar News