சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ-வுக்கு கோவையில் என்ன வேலை? வலுக்கும் எதிரிப்பு!

Update: 2021-06-13 00:45 GMT

தி.மு.க. இளைஞர் அணி செயலாளரும், சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின், கடந்த சில தினங்களாக கோவையில் முகாமிட்டு, கரோனா தடுப்புப் பணிகளை ஆய்வு செய்து வருகிறார்.

ஒரு தொகுதி எம்.எல்.ஏ தமிழகம் முழுக்க ஆய்வு செய்ய அதிகாரம் இருக்கா? என்பது அரசியல் வட்டாரத்தில் குழப்பத்தை ஏற்ப்படுத்தி வருகிறது.

வால்பாறை, பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, தொண்டாமுத்தூர், புலியகுளம், சிங்காநல்லூர், ரத்தினபுரி, கவுண் டம்பாளையம், மேட்டுப்பாளையம் உள்ளிட்ட இடங்களில் நடந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட உதயநிதி ஸ்டாலின், திமுக சார்பில் பொதுமக்களுக்கு காய்கறி, மளிகைப் பொருட்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

வால்பாறை அரசு மருத்துவமனை யில் ரூ.33 லட்சம் மதிப்பில் அமைக்கப் பட்டுள்ள ஆக்சிஜன் உற்பத்தி மையத்தை உதயநிதி ஸ்டாலின், திறந்து வைத்தார்.

அமைச்சர்கள் சக்கரபாணி, ராமச்சந்திரன், பொள்ளாச்சி மக்களவை தொகுதி உறுப்பினர் சண்முகசுந்தரம், மாவட்ட ஆட்சியர் நாகராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். எம்.எல்.ஏ பதவியை விட அதிகாரம் மிக்க அமைச்சர்களும், எம்.பிகளும் இருக்கும் நிலையில், சம்பந்தமே இல்லாத ஒரு தொகுதி எம்.எல்.ஏவான உதயநிதி, எதன் அடிப்படையில் திறந்து வைத்தார் எனத்தெரியவில்லை.

ஆரம்பத்திலேயே அமைச்சர் பதவி கொடுத்தால் என்ன தகுதி என்று கேள்வி வரும். விமர்சனங்களை எதிர் கொள்ள வேண்டிவரும். அதனால்தான் இப்படி ஒரு 6 மாதம் முதல் ஒரு வருடம் வரை தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து, ஓராண்டில் உள் துறை அமைச்சராகவோ அல்லது துணை முதல்வராகவோ உருவாக்கப்படுவார் என அரசியல் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது. 

Similar News