"டீக்கடைன்னா மணிக்கணக்கா உக்காருவாங்க, மதுக்கடைன்னா வாங்கிட்டு போய்டுவாங்க" - காங்கிரஸ் எம்.பி-யின் அடடே லாஜிக்!

Update: 2021-06-13 04:45 GMT

"டீக்கடை'ன்னா மணிக்கணக்கா உட்காந்துருப்பாங்க, ஆனா டாஸ்மாக்'ன்னா மதுபாட்டில் வாங்கிட்டு கம்முன்னு போய்டுவாங்க" என அதிரிபுதிரி விளக்கம் குடுத்துள்ளார் திருச்சி காங்கிரஸ் எம்.பி திருநாவுக்கரசர்.

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த மரவனூர் மற்றும் மணப்பாறை அரசு மருத்துவமனையில் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசு நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு முகக்கவசங்களை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பொழுதுதான் அவர் இந்ந வரலாற்று சிறப்பு வாய்ந்த விளக்கம் குடுத்தது. அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, "தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ளது என்றால் அங்கு மதுபாட்டிலை வாங்கிக் கொண்டு உடனே சென்று விடுவார்கள், கூட்டம் கூடுவதற்கு வாய்ப்பில்லை. ஆனால் டீக்கடைகள் ஏன் திறக்கப்படவில்லை என்றால் டீக்கடையில் டீயை வாங்கிக் கொண்டு மணிக்கணக்கில் அமர்ந்திருப்பார்கள். இதனால் கூட்டம் கூட வாய்ப்பிருக்கின்றது என்பதால் தான் திறக்கப்படவில்லை. அதுவும் இன்னும் ஒரு வாரத்திற்கு மட்டும் தான்" என பட்டாசாக விளக்கம் கொடுத்தார்.

மதுக்கடைகளை திறக்க அனுமதியளித்த முதல்வர் ஸ்டாலினுக்கே இந்த விளக்கம் புதிதாக இருந்துருக்கும்.

Similar News