வேலைய காட்ட ஆரம்பிச்சிட்டாங்க..! ஸ்டேஷனுக்கு வந்து போலீசை மிரட்டிய தி.மு.க நிர்வாகி..! ஆரம்பமே அழிச்சாட்டியம்!

Update: 2021-06-17 00:45 GMT

தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து, ஆங்காங்கே  அத்துமீறல் சம்பவம் அதிகரித்து வரும் நிலையில், சென்னை அபிராமபுரம் காவல் நிலையத்தில் திமுக பிரமுகர்கள் ஒருவர் காவல்நிலையத்தில் புகுந்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

கடந்த ஜூன் 14அன்று இரவு, சில மர்மநபர்கள் ஆர்.ஏ.புரத்தைச் சேர்ந்த ராஜேஷ் என்பவரை தாக்கிவிட்டு அவரது மொபைல் போன் மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

இதில் படுகாயமடைந்த அவருக்கு தலையில் 8 தையல் போடப்படுள்ளது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த அபிராமபுரம் போலீசார் 3பேரை கைது செய்தனர்.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை மதியம் காவல் நிலையம் வந்த, 123 வது வார்டு திமுக மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் கைது செய்யப்பட்ட மூவரையும் ரிமாண்ட் செய்ய வேண்டாம் என்று என்றும் தான் ஏற்கனவே ஆய்வாளர் மற்றும் உதவி ஆணையரிடம் பேசிவிட்டதாகவும் கூறியுள்ளார். ஆனால் காவல்துறையினர் இதற்கு மறுக்கவே அங்கு திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக காவல்துறையினர் பதிவு செய்த இரண்டரை நிமிட வீடியோவில், ராஜேந்திரன் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுவதையும், தொலைபேசி அழைப்பை மேற்கொள்வதையும், அதிகாரிகளை  எம்.எல்.ஏவிடம் பேசும்படி கேட்டுக்கொள்வதையும் தெளிவாக பதிவாகியள்ளது.

மேலும் இந்த வாக்குவாதத்தில், அதிகாரிகளை அச்சுறுத்திய பின்னர் ராஜேந்திரன் நிலையத்தை விட்டு வெளியேறினார் என்று ஒரு அதிகாரி கூறினார். ஆனாலும் கைது செய்யப்பட்ட மூவரும் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டனர்.


Similar News