"நீட் பாதிப்பு குறித்து மனு வாங்க முடியும், உட்கார வைத்து பேச முடியாது" - உதயநிதியை திருப்பி அனுப்பிய நீதிபதி!

Update: 2021-06-24 02:30 GMT

"வழக்கமாக இதுபோல் கருத்தை தெரிவிப்பவர்களிடம் இதுபோல் உட்கார வைத்து பேசுவதில்லை. மனுவை வாங்கிக்கொண்டு படித்துப்பார்த்து, பரிந்துரைக்கு அனுப்புவேன்" என நீட் தேர்வு பாதிப்பு குறித்த மனுவை நீதிபதி ஏ.கே.ராஜனிடம் அளிக்க சென்ற உதயநிதியை உடனே திருப்பி அனுப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்பட்டுத்தியுள்ளது.

நேற்று சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டப்பேரவை உறுப்பினர் உதயநிதி ஸ்டாலினும், காஞ்சிபுரம் சட்டப்பேரவை உறுப்பினர் எழிலரசனும் நீட் தேர்வு பாதிப்புகள் குறித்த தங்களது கருத்தை இன்று ஏ.கே.ராஜனிடம் மனுவாக அளிக்க சென்றனர்.

மனுவை நீதிபதி ஏ.கே.ராஜனிடம் அளித்துவிட்டு பின்பு நீட் தேர்வு பாதிப்பு குறித்து நீதிபதி ஏ.கே.ராஜனிடம் விளக்க முற்பட்டனர். அதற்கு பதிலளித்த நீதிபதி ஏ.கே.ராஜன் "நான் எவ்வளவு காலமா இந்த நீட் தேர்வு வேணாம்னு எழுதியிருக்கேன் தெரியுமா" என அவர்களை நோக்கி கேள்வி எழுப்பினார்.

மேலும் தொடர்ந்து நீட் தேர்வில் பாதிக்கப்பட்டு உயிரிழந்த மாணவர்களின் பெற்றோர்களிடம் தனிப்பட்ட முறையில் கருத்து கேட்கவேண்டும் என தி.மு.க எம்.எல்.ஏ'க்கள் கூற பதிலுக்கு நீதிபதி ஏ.கே.ராஜன் "வழக்கமா இதுபோல் கருத்தை தெரிவிப்பவர்களிடம் இதுபோல் உட்கார வைத்து பேசுவதில்லை. மனுவை வாங்கிக்கொண்டு படித்துப்பார்த்து, பரிந்துரைக்கு அனுப்புவேன்" என அவர்களை வழியனுப்பி வைத்தார்.

Similar News