சேப்பாக்கம் தொகுதிக்கு தனியார் தன்னார்வ அமைப்புகள் தடுப்பூசி அளித்து உதவி செய்கின்றனர் - சமாளிக்கும் உதயநிதி!

Update: 2021-07-10 01:00 GMT

மற்ற மாவட்டங்களில் தடுப்பூசி தட்டுப்பாடு இருக்கும் போது, சேப்பாக்கம் தொகுதியில் மட்டும் எப்படி செலுத்துகிறார்கள் என்பதற்கு சமாளிக்கும் விதமாக உதயநிதி விளக்கம் அளித்துள்ளார்.

தமிழகத்தில் பல இடங்களிர் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்படும் வேளையில் எம்.எல்.ஏ உதயநிதியின் தொகுதியில் மட்டும் தட்டுப்பாடு இல்லாமல் தடுப்பூசி கிடைக்கிறது என பல இடங்களில் புகார் எழுந்துள்ளது. இதனை சமாளிக்கும் விதமாக இன்று செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்தார்.

சென்னை சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றின் முடிவில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய உதயநிதி கூறியதாவது, "தமிழகத்தில் பல இடங்களில் தடுப்பூசி தட்டுப்பாடு இருக்கும் போது, சேப்பாக்கம் தொகுதியில் மட்டும் எப்படி செலுத்துகிறார்கள் என்று யாரோ தேவையில்லாத செய்திகளை பரப்புகின்றனர். பல தனியார் மருத்துவமனைகள் மற்றும் தன்னார்வ அமைப்புகள் இந்த தொகுதிக்கு மருந்துகளை அளித்து வருவதாக" கூறினார்.

மேலும், "நீட் தேர்வு குறித்து முடிவெடுக்க தமிழக அரசுக்கு உரிமை உள்ளது என்பதுதான் எங்களின் எண்ணம். நீட் வேண்டுமா வேண்டாமா என்பது குறித்து அமைக்கப்பட்டுள்ள குழுவல்ல, நீட் தேர்வினால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆராய்வதற்காக நீதியரசர் ஏ.கே.ராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. தி.மு.க தேர்தல் அறிக்கையிலும் நீட் தேர்வு குறித்து தெரிவித்திருந்தோம், நீட் தேர்வு குறித்து விரைவில் முதலமைச்சர் நல்ல முடிவை அறிவிப்பார்" என தெரிவித்தார்.

Similar News