கேரளாவில் பரவும் 'ஜிகா' வைரஸ் - எல்லையை மூடாமல் வேடிக்கை பார்க்கும் தமிழக அரசு!

Update: 2021-07-11 04:30 GMT

கேரளாவில் 15 பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அந்த மாநிலத்தின் அருகாமையில் உள்ள மாவட்ட எல்லைகளை மூடாமல் தமிழக அரசு அலட்சியமாக வேடிக்கை பார்த்து வருகிறது.

தற்பொழுது கொரோனோ இரண்டாம் அலையில் இருந்து தமிழக முழுவதும் மீளாத நிலையில் அண்டை மாநிலமான கேரளத்தில் 'ஜிகா' எனப்படும் புதியவகை வரைஸ் பரவி வருகிறது. கேரளா மாநிலத்தில் ஜிகா வைரஸால் 15 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வைரஸ் தமிழகத்திற்கு நுழைந்து விடுமோ என்ற அச்சம் சுகாதாரத்துறைக்கு வந்துள்ளது. இதன் காரணமாக கேரளாவில் இருந்து வரும் வாகனங்கள் அனைத்தும் தமிழக எல்லையில் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மேலும் தமிழக அரசு இந்த கொடிய சூழலில் தமிழக, கேரள எல்லையை மூடாமல் வெறுமனே கண்காணித்து வருவது தமிழக மக்களுக்கு மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்பொழுது கொரோனோ இரண்டாம் அலையில் இருந்து மீளாத நிலையில், ஊரடங்கினால் பொருளாதார பாதிப்பு ஏற்பட்ட நிலையில் தமிழக அரசின் இத்தகைய அலட்சிய போக்கு வேதனை தருவதாக அமைந்துள்ளது.

Similar News