"நாங்க நீட் தேர்வு வேண்டாம் கண்டீசனா சொல்லிட்டோம்" - விமான நிலையத்தில் போங்கு காட்டிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

Update: 2021-07-16 12:45 GMT

"எது நடந்தாலும் சரி தமிழகத்தில் நீட் தேர்விற்கு விலக்கு அளிக்க வேண்டும்" என மத்திய அரசிடம் கேட்டுகொண்டதாக மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

நீட் தேர்வை மையப்படுத்தி தேர்தல் வாக்குறுதிகள் குடுத்து ஆட்சியை பிடித்த தி.மு.க'விற்கு தற்பொழுது நீட் தேர்வு தலைவலியாக அமைந்துள்ளது. மக்கள் எங்கே நீட் தேர்வுக்கு விலக்கு என கேட்க துவங்கிய நிலையில் ஓய்வு பெற்ற நீதிபதி ஆணையம், கருத்து கேட்பு, மத்திய அமைச்சர் உடனான சந்திப்பு என போக்கு காட்டி வருகிறது தி.மு.க. அதாவது நீட் தேர்வை மாநில அரசு ரத்து செய்ய உரிமம் இல்லை என தெரிந்தும் நீட் தேர்வுக்கு எதிராக செயல்படவதாக போங்கு காட்டி வருகிறது.

இந்நிலையில் டெல்லியில் இருந்து சென்னை திரும்பிய அமைச்சர் மா.சுப்பிரமணியம் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது பேசிய அவர், "டெல்லியில் ஒன்றிய அரசின் சுகாதாரத்துறை மற்றும் கல்வித்துறை அமைச்சர்களை சந்தித்து தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு தேவையான கட்டமைப்பை கேட்டு இருக்கிறோம்.

நீட் தேர்வை பொறுத்தவரை ஏற்கனவே உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்படி நடந்து கொண்டு இருக்கிறது என்று கூறினார்கள் இருந்தபோதும் தமிழகத்தில் உள்ள சூழலை நாங்கள் எடுத்து சொல்லியிருக்கிறோம். தமிழகத்தில் இதுவரை 13 மாணவர்கள் தங்களது உயிரை மாய்த்து கொண்டு இருக்கிறார்கள்.கிராமப்புறத்தில் இருக்க கூடிய மாணவர்களின் இக்கட்டான சூழலையும் இங்கு இருக்க கூடிய பாட திட்டத்தில் உள்ள வித்தியாசங்களையும் எடுத்து கூறியுள்ளோம். எதுவாக இருந்தாலும் தமிழகத்தில் நீட் தேர்விற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்பதை உறுதியாக சொல்லிவிட்டு வந்து உள்ளோம்" என கூறினார்.

Similar News