ஆடி மாத கூழுக்கு தடை, பக்ரீத் தொழுகையை அனுமதி! வெட்டவெளிச்சமான தமிழக அரசின் போலி மதசார்பின்மை!

Update: 2021-07-25 05:45 GMT

தமிழகத்தின் பல பகுதிகளில் கொரோனோ பரவலை காரணம் காண்பித்து ஆடி மாதம் அம்மன் கோவில்களில் கூழ் ஊற்ற தடை விதிக்கப்பட்டது. ஆனால் பக்ரீத் பண்டிகைக்கு எவ்வித தடையும் இன்றி இஸ்லாமியர்கள் தொழுகை நடத்த அனுமதி வழங்கப்பட்டது.

கடந்த 21-ஆம் தேதி புதன்கிழமை இஸ்லாமியர்களால் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டது. இஸ்லாமிய முறைப்படி பள்ளிவாசல்களில் தொழுகை நடத்தப்பட்டது ஆனால் கொரோனோ காரணம் காட்டி அரசால் எவ்வித தடையும் விதிக்கப்படவில்லை. வழக்கம்போல தமிழகத்தின் அனைத்து பிரிவு இஸ்லாமியர்களும் தங்களது பள்ளிவாசல்களில் தங்களின் விருப்பம் போல் கூட தொழுகை நடத்தி ஒருவரை ஒருவர் கட்டி தழுவி தங்களது பக்ரீத் வாழ்த்துக்களை பரிமாறி கொண்டனர். தமிழகத்தில் ஆளும் தி.மு.க அரசோ, மாவட்ட ஆட்சியர்களோ, சுகாதாரத்துறையை சேர்ந்த அதிகாரிகளோ எவ்வித தடையோ, எச்சரிக்கை அறிவிப்போ விடுக்கவில்லை.


மற்றுமொரு நிகழ்வாக இந்துக்களின் பாரம்பர்யமிக்க ஆடி மாத வழிபாட்டின் ஒரு பகுதியாக பெண் தெய்வ அம்மன் வழிபாடு கூழ் ஊற்றுதல் நிகழ்வுக்கு தமிழகத்தில் அனைத்து இடங்களிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி கொரோனோவை காரணம் காட்டி ஆடி மாத அம்மன் கோவில் கூழ் ஊற்றும் நிகழ்வுகளுக்கு தடை விதித்தார். ஆனால் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல இடங்களில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமியர்கள் தொழுகை நடத்துவதற்கு தடையோ, குறைந்தபட்ச எச்சரிக்கையோ இவர் வெளியிடவில்லை.


ஆடி மாத ஆன்மிக நிகழ்ச்சிகளுக்கு கோவில்களில் அனுமதி மறுக்கும் அரசுக்கு ஹிந்து முன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் வெளியிட்ட அறிக்கையில், "ஆடி மாதம் ஹிந்து கோவில்களில் பல்வேறு சிறப்பு வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம். சில மாவட்டங்களில் கூழ் ஊற்றுவது மற்றும் ஆடித்தபசு விழாவுக்கு தடை செய்து கலெக்டர்கள் அறிவித்துள்ளனர். இதற்கு அனுமதி மறுப்பது, அரசின் ஹிந்து விரோத போக்கை காட்டுவதாக உள்ளது. உண்மையான மதசார்பின்மை கடைபிடிக்கும் அரசு ஹிந்துக்கள் வழிபாடுகளுக்கு மட்டும் தடை விதிப்பது முறையில்லை. இது போன்ற நடவடிக்கைகளை தமிழக அரசு கை விட வேண்டும்" இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

Similar News