"இனியுமா இந்த மதுவை விற்று அரசாங்கம் பிழைக்க வேண்டும்?" ஸ்டாலினை சாடும் அன்புமணி ராமதாஸ் !

Update: 2021-10-05 03:00 GMT

"தமிழ்நாட்டில் உள்ள ஐந்தாயிரத்திற்கும் அதிகமான மதுக்கடைகளை ஒரே கட்டமாகவோ, படிப்படியாகவோ மூடி மதுவிலக்கை நடைமுறைப்படுத்த முதலமைச்சர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என பா.ம.க அன்புமணி ராமதாஸ் அறிக்கை விடுத்துள்ளார்.

வேலூர் மாவட்டம், திருவலம் அருகிலிருக்கும் திருப்பாக்குட்டை பகுதியைச் சேர்ந்தவர் சின்னசாமி. இவர் கடந்த வெள்ளிக்கிழமை இரவு சின்னசாமி தனது வீட்டுக்குள் அமர்ந்து மது குடித்திருக்கிறார். அப்போது, சின்னசாமி பாதி குடித்துவிட்டு வைத்திருந்த மதுவைக் குளிர்பானம் என நினைத்துள்ளான் பேரன் ருத்தேஷ். தாத்தாவுக்குத் தெரியாமல் ஓடிச்சென்று பாட்டிலில் மீதமிருந்த மதுவை எடுத்துக் குடித்த ருத்தேஷ் சில நிமிடங்களுக்குள் புரை ஏறி சுருண்டு விழுந்துள்ளான். தன் கண் முன்னால் பேரன் துடிப்பதைப் பார்த்ததும் அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டு சின்னசாமி பரிதாபமாக உயிரிழந்தார். சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுவன் ருத்தேஷும் மரணமடைந்துவிட்டான். மதுவால் நேர்ந்த இந்த துயரச் சம்பவம், பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக பா.ம.க'வின் அன்புமணி ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதவது, "வேலூர் மாவட்டம், திருவலம் அருகிலிருக்கும் திருப்பாக்குட்டை பகுதியைச் சேர்ந்தவர் சின்னசாமி. வயது 62. கடந்த வெள்ளிக்கிழமை இரவு சின்னசாமி தனது வீட்டுக்குள் அமர்ந்து மது குடித்திருக்கிறார். அப்போது, சின்னசாமி பாதி குடித்துவிட்டு வைத்திருந்த மதுவைக் குளிர்பானம் என நினைத்துள்ளான் பேரன் ருத்தேஷ். தாத்தாவுக்குத் தெரியாமல் ஓடிச்சென்று பாட்டிலில் மீதமிருந்த மதுவை எடுத்துக் குடித்த ருத்தேஷ் சில நிமிடங்களுக்குள் புரை ஏறி சுருண்டு விழுந்துள்ளான். தன் கண் முன்னால் பேரன் துடிப்பதைப் பார்த்ததும் அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டு சின்னசாமி பரிதாபமாக உயிரிழந்தார். சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுவன் ருத்தேஷும் மரணமடைந்துவிட்டான். மதுவால் நேர்ந்த இந்த துயரச் சம்பவம், பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

தெருவுக்குத் தெரு மதுக்கடைகள் திறக்கப்பட்டிருப்பதுதான் தாத்தாவும், பேரனும் உயிரிழப்பதற்குக் காரணம். இலக்கு நிர்ணயித்து, மது விற்பனை செய்துவரும் தமிழக அரசுதான், இந்த இரட்டை உயிரிழப்புகளுக்குப் பொறுப்பேற்க வேண்டும். மதுவின் தீமைகள் குறித்து அறியாமல், மாணவர்கள் பள்ளி வகுப்புகளில் அமர்ந்து மது அருந்தும் கொடுமைகள் தமிழ்நாட்டில் நடக்கின்றன. இந்த ஆபத்தான போக்கு தடுக்கப்பட வேண்டும்.

இதற்கு பிறகும் மதுவால் கிடைக்கும் வருமானத்திற்காக, அதற்காக தமிழ்நாட்டில் உள்ள ஐந்தாயிரத்திற்கும் அதிகமான மதுக்கடைகளை ஒரே கட்டமாகவோ, படிப்படியாகவோ மூடி மதுவிலக்கை நடைமுறைப்படுத்த முதலமைச்சர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று வலியுறுத்தியிருக்கிறார் அன்புமணி ராமதாஸ்.


Source - Junior Vikatan

Similar News