பெட்ரோல், டீசல் விலையை தி.மு.க வாக்குறுதி கொடுத்தும் ஏன் குறைக்கவில்லை - வானதி சீனிவாசன் கேள்வி!
பெட்ரோல், டீசல் விலையை இரண்டு முறை பிரதமர் மோடி குறைத்தார் என்றும், தி.மு.க., கொடுத்த வாக்குறுதிபடி ஏன் குறைக்கவில்லை என்று பா.ஜ.க., மகளிர் அணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ., கேள்வி எழுப்பியுள்ளார்.
பெட்ரோல் டீசல் விலையை 2 முறை குறைத்தார் மோடி நீங்கள் வாக்குறுதி கொடுத்தும் ஏன் குறைக்கவில்லை - வானதி சீனிவாசன் @VanathiBJP #vanathisrinivasan #BJP #DMK #annamalaik #வானதிசீனிவாசன் #வானதி #politics #PetrolDieselPriceHike #electricitybill #senthilbalaji #பெட்ரோல் #MKstalin pic.twitter.com/uBW84H4Gp0
— Oneindia Tamil (@thatsTamil) July 23, 2022
இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது: மக்களின் அத்தியாவசி தேவைகளான மின்சாரக் கட்டணத்தை தி.மு.க., அரசு உயர்த்தியுள்ளது. இது கண்டனத்திற்குரியது. மேலும், பெட்ரோல், டீசல் விலையை பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு குறைத்துள்ளது. ஆனால் தி.மு.க., அரசு தேர்தல் வாக்குறுதியாக பெட்ரோல், டீசல் விலையை குறைப்பதாக அறிவித்தனர். ஆனால் இன்றுவரை அவர்கள் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. இதுதான் திராவிட மாடல் அரசா என கேள்வி எழுப்பினார்.
Source, Image Courtesy: One India Tamil