திமுகவில் கோஷ்டி பூசல்!! பாளையங்கோட்டை தொகுதியில் அப்துல் வகாப் நிலை என்ன?

Update: 2026-03-06 09:59 GMT

திமுகவில் கோஷ்டி பூசல் வெளிப்படையாக தெரிகிறது. பாளையங்கோட்டை தொகுதியில் அப்துல் வகாப் விருப்ப மனு அளித்துள்ளார். ஆனால் அவருடன் அமைச்சர் கே.என்.நேரு இருந்ததால, வேட்பு மனு கொடுத்தது போல உள்ளது. 


திமுகவின் சம்பிரதாய சட்டவிதிப்படி, விருப்ப மனுவுடன் மாவட்டச் செயலாளரின் பரிந்துரை கடிதம் வேண்டும். ஆனால் இப்போது அப்துல் வகாப் கொடுத்துள்ள மனுவில் அந்த கடிதம் இல்ல.


இதனால் மற்ற நிர்வாகிகளுக்கு அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. தங்களுக்கு சீட் கிடைக்குமா? திமுகவில் இந்த கோஷ்டி பூசல் முடியுமா? என கேள்வி எழுந்துள்ளது. 


அப்துல் வகாப் மீண்டும் களமிறங்க அமைச்சர் கே.என்.நேரு ஆசியுடன் தயாராகிவிட்டார். அதனால்தான் வேட்புமனுவையும் அளித்துள்ளார்.

Tags:    

Similar News