சென்னையில் பா.ஜ.க வேட்பாளரை தாக்க முயற்சித்த தி.மு.கவினர் - தேர்தல் காலம் என்று கூட பார்க்காமல் தொடரும் தி.மு.கவினர் அட்டகாசம்!

Update: 2021-03-30 11:45 GMT

தி.மு.க என்றாலே ரவுடியிசம் என்றுதான் மக்களுக்கு நினைவு வரும், அதை அடிக்கடி தன் செயல்கள் மூலம் தி.மு.க'வும் நிரூபித்துக்கொண்டே வருகிறது. சாமானியன் முதல் தமிழக முதல்வர் வரை இவர்களின் அட்டகாசத்திற்கு தப்பிக்காத ஆட்கள் இல்லை! அந்த வகையில் சென்னையில் ஒரு எம்.எல்.ஏ வேட்பாளரையே தி.மு.க'வினர் மிரட்டி பணிய வைக்கும் சம்பவம் நடந்தேறியுள்ளது.

சென்னை துறைமுகம் தொகுதியில் பா.ஜ.க சார்பில் வினோஜ் செல்வம் போட்டியிடுகிறார். அ.தி.மு.க, பா.ஜ.க, தி.மு.க ஆகிய இரு கட்சிகளும் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன. அத்தொகுதியில் தி.மு.க வேட்பாளர் சேகர்பாபு செல்வாக்கு மிகுந்தவராக இருந்து வருகிறார்.

இந்த நிலையில் அவரை எதிர்ந்து அ.தி.மு.க மற்றும் பா.ஜ.க கூட்டணி சார்பில் களமிறங்கியுள்ள வினோஜ் செல்வம் சேகர்பாபு தனக்கு பல்வேறு வகையில் நெருக்கடி கொடுத்து வருவதாக கூறியுள்ளார். இது குறித்து இன்று செய்தியாளர்களிடம் கூறிய அவர், "நேற்றைய முன்தினம் துறைமுகம் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் பிரச்சாரம் முடித்து விட்டு நான் எனது நண்பர் வீட்டில் உணவருந்திக் கொண்டிருந்தபோது அங்கு திடீரென வந்த தி.மு.க'வை சேர்ந்த கும்பல் வீட்டுக்குள் நுழைந்து வீட்டில் இருந்த பொருட்கள் எல்லாம் அடித்து உடைத்து நாசம் செய்து விட்டனர்.

மேலும் என்னை தகாத வார்த்தைகளால் பேசி மிரட்டல் விடுத்தனர். இது தொடர்பாக உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அங்கிருந்த ஆதாரங்களை எடுத்துக் கொண்டு வீட்டின் உரிமையாளர் கொடுத்த புகாரின் பேரில் நேற்று அதில் தொடர்புடைய இரண்டு பேரை கைது செய்துள்ளனர்" என கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

மேலும் இதுவரை வெறும் 2 பேரை மட்டுமே கைது செய்துள்ளனர். மீதம் உள்ள நபர்களை நிச்சயம் போலீசார் கைது செய்து விரைவில் நடவடிக்கை எடுப்பார்கள் என அந்த பகுதி மக்களும் நானும் நம்புகிறோம் என வினோஜ் தெரிவித்தார்.

ஒரு வேட்பாளரையே மிரட்டி பணிய வைக்க முயற்சிக்கும் தி.மு.க'விற்கு மக்கள் தகுந்த பாடம் கற்பிற்பார்கள் என அப்பகுதி பா.ஜ.க மற்றும் அ.தி.மு.க'வினர் கூறி வருகின்றனர்.

Tags:    

Similar News