அவன், இவன் என்ற ஏகவசனத்தில் பத்திரிக்கையாளர்களை திமிறாக அழைத்து பேசிய உதயநிதி!

Update: 2021-04-02 02:15 GMT

ஒரு கட்சி ஆட்சிக்கு வருவதற்கு முன்பே மற்றவர்களை மிரட்டுவதும், ஒருமையில் அழைப்பதும், பெண்களை கேலி செய்வதும், வாய்க்கு வந்தபடி உயிருள்ள மற்றும் இறந்த தலைவர்களை கேலியும் செய்து பிரச்சாரம் என்ற நினைப்பே இல்லாமல் பேசி திரிகிறது என்றால் அது தி.மு.க மட்டுமே. பெண்களை இழிவாக பேசுகின்றனர், இறந்த பெண் முதல்வரை மூன்றாம் தரமாக விமர்சிக்கின்றனர்,

அதிகாரிகளை ஒருகை பார்த்து விடுவேன் என்கின்றனர், 11 மணிக்கு ஆட்சிக்கு வந்தால் 11.05 நாங்கள் யார் காட்டுகிறோம் என ஜம்பமாக பேசி வாக்கு சேகரிக்கின்றனர், தலைவர்கள் தான் இப்படி என்றால் தொண்டர்கள் பிரச்சாரத்திற்கு வருகின்ற இடத்தில் சாப்பிட்டுவிட்டு காசு கேட்டால் "தி.மு.க'காரன் கிட்டயே காசு கேட்கிறாயா?" என கடைகாரனை அடிக்க பாய்கிறார்கள். இப்படி நாளுக்கு நாள் பிரச்சாரம் என்கிற நினைப்பே இல்லாமல் தி.மு.க சுற்றி வருகிறது.

இப்படி இருக்கையில் தி.மு.கவின் பட்டத்து இளவரசர் உதயநிதி பத்திரிக்கையாளர்களை அவன், இவன் என்று ஒருமையில் பேசியது மிகவும் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.

சேலம் மாவட்டம், ஆத்துார், கெங்கவல்லி தொகுதிகளில், தி.மு.க வேட்பாளர்கள் சின்னதுரை, ரேகாபிரியதர்ஷினியை ஆதரித்து, அக்கட்சி இளைஞரணி செயலர் உதயநிதி பிரச்சாரம் செய்தார். அப்பொழுது அவர் பேசியதாவது, "லோக்சபா தேர்தலை போன்று, சட்டசபை தேர்தலிலும், தி.மு.கவை வெற்றி பெற வைக்க வேண்டும்.

அனைத்து தொலைக்காட்சி, பத்திரிக்கைகளில் கருத்து கணிப்பு போட்டுட்டான். 180 இடங்களில், தி.மு.க வெற்றி பெறும் என, சொல்லிட்டான்" என பத்திரிக்கையாளர்களை அவன், இவன் என்ற ஏகவசனத்தில் மரியாதை இல்லாமல் பேசினார். இதற்கும் உடனிருந்த உடன்பிறப்புகள் ஆரவாராமாக கைதட்டி ஆர்ப்பரித்தனர்.

தி.மு.க'வினர் ஆட்சிக்கு வருவதற்கு முன்னே இப்படி என்றால் ஆட்சிக்கு வந்துவிட்டால் ஒருவர் நிம்மதியாக வாழ முடியாது என அங்கிருந்த பொதுமக்கள் பேசுவதை கேட்க முடிந்தது.

Similar News