ஜெயலலிதாவின் உருவத்தை கேலியாக பிரச்சாரத்தில் பேசிய தி.மு.க தலைவர் ஸ்டாலின் - வக்கிரவாதிகளின் கூடாரமா தி.மு.க!

Update: 2021-04-02 07:30 GMT

தி.மு.கவில் பிரச்சாரம் என்றால், திறமையாக பேசுவது என்றால் இரண்டுக்கும் பெண்களை கேலி செய்து பேசுவது அல்லது அவர்களை கொச்சையாக பேசுவது என்பதே பொருளாகும். இதனை அதன் கட்சி தலைவர்கள் அனைவரும் தங்களது பேச்சுக்கள் மூலம் நிரூபித்து வருகின்றனர். கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் திண்டுக்கல் ஐ.லியோனி துவங்க தி.மு.க தலைவர் ஸ்டாலின் வரை இது நீண்டுள்ளது.

அந்த வகையில் ஸ்டாலின் மறைந்த முதல்வர் ஜெ.ஜெயலலிதா அம்மையாரின் எடையை மிகுந்த கிண்டலாக கூறி மக்களிடத்தில் கேலியாக பேசியுள்ளது பெண்கள் மத்தியில் மிகுந்த சலசப்பை ஏற்படுத்தியுள்ளது.


சென்னை ஆயிரம் விளக்கு, மயிலாப்பூர் தொகுதிகளில் நேற்று ஸ்டாலின் வாக்கு சேகரித்தார். அப்பொழுது பேசிய அவர் கூறியதாவது, "இங்கே மியூசிக் அகாடமி பக்கத்தில் ஓர் மேம்பாலம் உள்ளது, இதில்தான் ஜெயலலிதா அம்மையால் தினமும் வீட்டிலிருந்து கோட்டைக்கு, கோட்டையில் இருந்து வீட்டிற்கு சென்று வருவார். அப்படி "வெயிட்"டான அவரே சென்று வரும்போது இந்த பாலம் ஒன்றும் ஆகவில்லை, "வெயிட் என நான் கூறியது அவர் முதல்வர் பதவியைதான்" என நக்கலாக கூறினார்.

உடனே கீழே குழுமியிருந்த தி.மு.க தொண்டர்களும் மூன்றாம் தர எண்ணத்துடன் பலமாக கைதட்டி சிரித்தனர். இப்படி ஒரு கட்சியின் தலைவரே ஒரு முதல்வரை வயதான பெண்மணி என பாராமல் எடையை கேலி செய்து பேசியது பரபரப்பாகியுள்ளது.

மேலும் மக்கள் மத்தியில் தி.மு.கவினரின் இவ்வித பேச்சுக்கள் முகம் சுழிக்கும் அளவிற்கு அவர்களின் மூன்றாம் தர எண்ணத்தை பிரதிபலிப்பதாக இருப்பதாக கூறுகின்றனர்.


ஏற்கனவே தி.மு.க கொள்கை பரப்பு செயலாளர் திண்டுக்கல் ஐ.லியோனி பெண்களின் இடுப்பை பற்றி கேவலமாக பிரச்சாரத்தில் பேசினார், துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா தமிழக முதல்வரின் தாயாரை இழிவாக பேசினார், தயாநிதி மாறன் ஜெயலலிதா'விற்கும், மோடிக்கும் என்ன உறவு என தவறான அர்த்தத்தில் பேசினார், தி.மு.கவின் பட்டத்து இளவரசர் எடப்பாடி சசிகலா இரட்டை கால்களில் புகுந்து முதல்வர் ஆனார் என வரைமுறை இல்லாமல் பேசினார்.

இப்படி அருவருப்பான பேச்சுக்களை தி.மு.க'வினர் உதிர்த்து வந்த நிலையில் அதற்கு மணிமகுடமாய் கட்சி தலைவர் ஸ்டாலின் இவ்வாறு பேசியிருப்பது மக்களிடையே குறிப்பாக பெண்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

Similar News