அ.தி.மு.க அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நேரடி உதவியாளர் வீட்டில் ரெய்டு - கட்சி பாகுபாடின்றி அதிரடி காட்டும் வருமான வரித்துறை!

Update: 2021-04-02 12:30 GMT

இன்னும் இரு தினங்களில் தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் நிலையில் சமீப காலமாக வருமான வரித்துறையினர் ரெய்டுகள் வழக்கத்தை விட அதிகமாக நடந்தேறிவந்தன. இந்த நிலையில் இன்று காலை முதல் அதிகமாக ரெய்டு நடந்தேறி உள்ளன. இதில் கட்சி பாகுபாடின்றி தி.மு.க, அ.தி.மு.க என அனைவரின் வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது. குறிப்பாக அ.தி.மு.க'வை சேர்ந்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நேர்முக உதவியாளர் சீனிவாசன் வீட்டிலும் இன்று மதியம் முதல் ரெய்டு நடந்து வருகிறது.



மேலும் இன்று காலை முதல் சென்னை நீலாங்கரையில் உள்ள ஸ்டாலினின் மகள் செந்தாமரை, மருமகன் சபரீசன் வீட்டில் சோதனை நடைபெற்று வருகிறது. செந்தாமரை வீடு, அலுவலகம் உள்பட 4 இடங்களில் 25'க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அதேபோல், சபரீசனின் நண்பர்களான கார்த்திக் (அண்ணாநகர் தொகுதி தி.முக. வேட்பாளர் மோகன் மகன்), ஜீ ஸ்கொயர் பாலா ஆகியோரின் வீடுகளிலும் சோதனை நடக்கிறது. நீலாங்கரையில் உள்ள ஐபேக் அலுவலகத்திலும் சோதனை நடக்கிறது.



தேர்தல் காலங்களில் முறைகேடாக பணப்பரிவர்த்தனை நடைபெறலாம் என்ற சந்தேகத்தில் இதுபோன்ற ரெய்டுகள் அனைத்தும் நடைபெற வாய்ப்புகள் அதிகம் எனவும் சரியான கணக்கு பராமரித்திருந்தால் இதற்கு பயம் தேவையில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News