"பத்திரமா பாத்துக்கோங்க வாக்கு பெட்டிய" என தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதிய செந்தில் பாலாஜி - தோல்வி பயம் காரணமா?

Update: 2021-04-12 02:30 GMT

வாக்கு எண்ணிக்கைக்கு இன்னும் 23 நாட்கள் உள்ள நிலையில் ஏற்கனவே பாதுகாப்பில் உள்ள "வாக்கு எண்ணும் மையங்களை பாதுகாக்க வேண்டும்" என தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளார் தி.மு.க வேட்பாளர் செந்தில் பாலாஜி.

தமிழகத்தில் கடந்த 6'ம் தேதி ஒரே கட்டமாக 235 தொகுதிகளுக்கும் சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்தது. இதன் தொடர்ச்சியாக வாக்கு இயந்திரங்கள் அனைத்து மாவட்டங்களிலும் 3 அடுக்கு பாதுகாப்புகளுடன் பத்திரமாக வைக்கப்பட்டு உள்ளது. இதனை தேர்தல் ஆணையம் தீவிரமாக கண்காணித்து வருகிறது. இருப்பினும் தேர்தல் ஆணையத்திற்கு தி.மு.க கரூர் தொகுதி வேட்பாளர் செந்தில் பாலாஜி கடிதம் எழுதியுள்ளார்.

அதில், "செந்தில் பாலாஜி ஆகிய நான் 135. கரூர் சட்டமன்ற தொகுதி திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராரும் கரூர் மாவட்ட தி.மு.க பொறுப்பாளருமாவேன். கடந்த 06.04.2021 தேதி அன்று நடைபெற்ற தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்கு பதிவு நடைபெற்று மேற்படி தேர்தலில் கரூர், அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம் மற்றும் குளித்தலை தொகுதிகளில் பதிவான வாக்கு பெட்டி இயந்திரங்கள் வாக்கு எண்ணிக்கைகாக கரூர் மாவட்டம், குமாரசாமி பொறியியல் கல்லூரியில் வைக்கப்பட்டு கண்காணிப்பு கேமரா மூலமாக நேரடியாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேற்படி வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கட்டிட அறையின் பின்புறம் உள்ள பகுதிகளை கண்காணிக்கும் வகையில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படவில்லை. இதனால் பின்புற வழியாக வெளியாட்கள் சென்று அங்குள்ள வாக்கு இயந்திரங்களை சேதப்படுத்தவும் வாய்ப்புள்ளது.

ஏற்கனவே பொருத்தப்பட்டுள்ள ஒருசில கேமராக்கள் சரியாக இயங்கவில்லை. மேலும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுவரும் காவலர்களை மேலும் அதிகரித்து மூன்று கட்டமாக கழற்ச்சி முறையில் பணியமர்த்தி பாதுகாப்பை பலப்படுத்த வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன்" என குறிப்பிட்டு கடிதம் எழுதியுள்ளார்.

அதாவது ஏற்கனவே 3 அடுக்கு பாதுகாப்பு, சுழற்சி முறையில் காவல் அதிகாரிகள் பணி, சுற்றிலும் கண்காணிப்பு கேமரா என முழுமையான பாதுகாப்புடன் தேர்தல் ஆணையம் வாக்கு இயந்திரங்களை கண்காணிக்கையில் இவர் ஏதோ புதிதாக இதனை செய்ய வேண்டும் என்கிற ரீதியில் கடிதம் எழுதியிருப்பது ஒருவேளை தோல்வி பயமாக கூட இருக்கலாம் என்கிற ரீதியில் கரூர் பகுதிவாழ் மக்களே கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Similar News