"பெண்களுக்கு மாதம் ₹1,000 திட்டம் எல்லாத்துக்குலாம் இல்லை" - அடுத்த பல்டி அடிக்கும் தி.மு.க அரசு!

Update: 2021-07-14 14:45 GMT

தமிழகத்தில் புதிதாக பதவியேற்றுள்ள தி.மு.க அரசு தேர்தலுக்கு முன்பு பெண்களை மையப்படுத்தி பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்தது. இந்த திட்டங்களில் பெண்களுக்கு நகர பேருந்துகளில் இலவச பயணம், மற்றும் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ₹1,000 ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் முக்கியமாக உள்ளது. ஆனால் இந்த திட்டம் குறித்தும், எப்போது அமல்படுத்தப்படும் என்பது குறித்தும் அரசிடம் இருந்து எந்த தகவலும் இல்லை.

இந்நிலையில், உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில், "குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ₹1,000 வழங்கும் திட்டம் நிதிநிலைக்கு ஏற்ப வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

ஏற்கனவே பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும், சிலிண்டர் ₹100 மானியம், நீட் தேர்வு என தி.மு.க வாக்குறுதிகள் அனைத்தும் பொய் என மக்களிடத்தில் நிரூபிக்கப்பட்டு வரும் நிலையில் இந்த "மாதம் ₹1,000" திட்டமும் கானல் நீராகி விட்டது என்பது மக்களிடத்தில் தெளிவாகி விட்டது.

Similar News