துவங்கிய 'விடியல்'? தமிழகத்தில் இரு தினங்களில் 13 ஆயிரத்தை தாண்டிய மின்வெட்டு புகார்கள்!

Update: 2021-05-25 10:15 GMT

"ஸ்டாலின் தான் வாராரு! விடியல் தரப் போராரு!"

என கோடிகளில் விளம்பரம் செய்து கடந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க வென்று ஆட்சியை பிடித்தது. அதே சமயம் கடந்த 2006-ஆம் ஆண்டு முதல் 2011 ஆண்டு வரையிலான தி.மு.க ஆட்சி காலத்தில் மின்வெட்டு தலைவிரித்தாடியது. சிறு தொழில்களை மூடும் அளவிற்கு மின்வெட்டு இருந்தது என்றால் புரிந்துக் கொள்ளுங்கள் தி.மு.க ஆட்சி காலத்தில் ஏற்பட்ட மின்வெட்டு அவலத்தை. தேர்தல் சமயத்தில் பிரச்சாரத்தில் இது ஒரு பேசு பொருளாகவே மாறியது. தி.மு.க ஆட்சிக்கு வந்தால் மின்வெட்டு மீண்டும் தலைதூக்க துவங்கிவிடும் என ஆனால் தி.மு.க'வினர் "இனி எங்கள் ஆட்சியில் தவறே நடக்காது" என்பது போன்ற வாக்குறுதிகளை அள்ளி வீசிவிட்டு ஆட்சியை பிடித்தனர்.

ஆனால் மக்கள் பயந்தது போலவே தி.மு.க ஆட்சியில் மின்வெட்டு துவங்கிவிட்டது. நீண்ட நாட்களுக்கு பின், சென்னை கணினி மையத்தில் மின் தடை குறித்து புகார் அளித்தோர் எண்ணிக்கை, 13 ஆயிரத்தை தாண்டியது. அண்ணா சாலையில் உள்ள மின் வாரிய தலைமை அலுவலக வளாகத்தில், மின் தடை நீக்கும் கணினி மையம் உள்ளது.

இதேபோன்று, ஒவ்வொரு மாவட்டத்திலும் மின் தடை நீக்கும் மையம் உள்ளது. அந்த மையங்களில், மின் தடையால் பாதிக்கப்படுவோர், 1912 என்ற தொலைபேசி எண்ணில், 24 மணி நேரமும் புகார் அளிக்கலாம். அங்கு பெறப்படும் புகார் பதிவு செய்யப்பட்டு, உடனே சம்பந்தப் பட்ட அலுவலகத்திற்கு தெரிவிக்கப்பட்டு, மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.


சென்னையில் உள்ள கணினி மையத்தில், தினமும் சராசரியாக 2,500 புகார்கள் பெறப்படுகின்றன. இந்நிலையில் சென்னை மற்றும் அதை சுற்றிய பகுதிகளில், வியாழன், வெள்ளிக் கிழமை மாலையில் பெய்த மழையால், மின் வினியோகனங்களில் பழுது ஏற்பட்டு, மின் தடை ஏற்பட்டது.சில இடங்களில், முன்னெச்சரிக்கைக்காக மின் வினியோகம் நிறுத்தப்பட்டது.

இதையடுத்து, பாதிக்கப்பட்ட பலரும் மின் தடை தொடர்பாக, கணினி மையத்தில் புகார் அளித்தபடி இருந்தனர். இதனால், நீண்ட நாட்களுக்கு பின், இம்மாதம், 20ம் தேதி, 6,500; 21-ஆம் தேதி, 7,000 என, இரு தினங்களில் மட்டும், 13 ஆயிரத்து, 500 புகார்கள் பெறப்பட்டுள்ளன.

Similar News