"உனக்கு 1500 எனக்கு 500" - கொரோனோ நிவாரண தொகையை ஆட்டையை போடும் திண்டுக்கல் மாவட்ட அதிகாரிகள்!

Update: 2021-05-18 05:00 GMT

நாட்டில் அரசாங்கம் செய்யும் உதவிகள் எவ்வித தங்குதடையுமின்றி மக்களுக்கு முழுமையாக சென்றடைந்தாலே மக்களின் வாழ்க்கைத்தரம் உயரும், ஏழை, எளியோர் எவ்வித சிரமமுமின்றி அரசாங்க திட்டங்கள் மூலம் முன்னேற்றம் காண்பர். ஆனால் அரசாங்க திட்டத்தையும், மக்களுக்கு செல்ல வேண்டிய நிவாரணம், மானியம் போன்றவைகளை இடையில் அரசு ஊழியர்கள், இடைத்தரகர்கள் போன்றோர் சுரண்டும் போது எத்தனை திட்டங்கள் அரசு அமல்படுத்தினாலும் அதற்கான பலன் கிடைக்காது.

இதனால்தான் மத்தியில் பா.ஜ.க அரசு ஆட்சியில் அமர்ந்த பிறகு நிவாரணம், மானியம் போன்றவைகளை மக்களின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்துகிறது. இதனால் இடையில் அரசு அலுவலர்கள், இடைத்தரகர்கள் போன்றோர் ஊழல் செய்ய வாய்ப்பில்லாமல் போகிறது. ஆனால் மாநில அரசு இன்னமும் சில திட்டங்களுக்கான மானிய, நிவாரண தொகையை மக்கள் வங்கி கணக்கில் செலுத்தாமல் அரசு அலுவலகம் மூலம் செலுத்துவதால் ஊழல், கையாடல் போன்றவைகள் நடைபெறுகின்றன.

அதற்கு சரியான உதாரணம் தற்பொழுது கொரோனோ நிவாரணமாக 2000 ரூபாயை ரேசன் கடைகள் மூலம் தி.மு.க அரசு விநியோகம் செய்வது. இந்த திட்டத்தில் திண்டுக்கல் மாவட்டம் குஜிலியாம்பாறையில் அரசு அதிகாரிகள் 2000 ரூபாய் நிவாரண தொகை தரவேண்டிய மக்களுக்கு 1500 ரூபாய் மட்டுமே தருவதாகவும் 500 ரூபாயை தராமல் ஏதேதோ காரணங்கள் கூறுவதாகவும் புகார் எழுந்துள்ளது மேலும் இது சம்மந்தமான வீடியோ ஒன்றும் வெளியாகியுள்ளது.

அந்த வீடியோ'வில் நிவாரணம் தொகை வாங்க வேண்டியவர் அங்குள்ள அரசு அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்வதாக பதிவாகியுள்ளது. அதில், "நானும் அரசு ஊழியர் மகன் தான் முன்பெல்லாம் குறைவாக இருந்த அரசு ஊழியர் ஊதியம் தற்பொழுது 50 ஆயிரம் போன்று ஆயிரக்கணக்கில் அரசால் தரப்படுகிறது. இருப்பினும் இந்த நிவாரண தொகையில் 500 ரூபாயை எவ்வித காரணமும் இன்றி நீங்கள் தர மறுக்குறீர்கள் கேட்டால் மாவட்ட ஆட்சியர் உத்தரவு என்கிறீர்கள்" என வாக்குவாதம் செய்வதாக அந்த வீடியோ பதிவாகியுள்ளது.

நிவாரணம் தொகையை ஏன் வங்கி கணக்கில் செலுத்தவில்லை என தமிழகத்தில் பா.ஜ.க'வை சேர்ந்தவர்கள் கேள்வி எழுப்பியபோது "அதெல்லாம் சரியாக வராது" என மல்லுகட்டிய தி.மு.க ஆதரவாளர்களுக்கு நிவாரணம் நேரடியாக செல்லாமல் அதிகாரிகள் மூலம் சென்றால் என்னவாகும் என தெளிவாக புரிய வைத்துள்ளது இந்த வீடியோ.

Similar News