"அரசு ஊழியர்களுக்கு ரேசன் அட்டைக்கு 4000 நிவாரணம் ஏன்?" தமிழக அரசுக்கு மதுரை ஹைகோர்ட் கேள்வி!

Update: 2021-05-13 03:00 GMT

அரசு ஊழியர்களுக்கு ரேசன் அட்டைக்கு நிவாரணம் வழங்கும் விவகாரத்தில் தமிழக அரசுக்கு மதுரை ஹைகோர்ட் கேள்வி.

திருச்செந்தூரை சேர்ந்த வக்கீல் ராம்குமார் ஆதித்தன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது, "தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் கொரோனா கால நிதியுதவி ரூ.4 ஆயிரம் வழங்கப்படுகிறது. இதில் முதல் தவணையாக அரிசி வாங்கும் ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு வருகிற 15-ந்தேதி முதல் தலா ரூ.2 ஆயிரம் வழங்க, டோக்கன் வினியோகம் செய்யப்படுகிறது. அரிசிபெறும் ரேஷன்கார்டுதாரர்களில் மத்திய-மாநில அரசு அதிகாரிகள், அரசு சார்ந்த நிறுவனங்களில் பணியாற்றுபவர் கள், அரசு மற்றும் அரசு நிதி உதவி பெற்று இயங்கும் கல்லூரி, பள்ளிகள், இதர கல்வி நிறுவனங்களில் பணியாற்றுபவர்களும் உள்ளனர். அரசு ஊழியர்களுக்கு வழங்குவதை தவிர்த்து, அந்த நிதியை கொண்டு கொரோனா சிகிச்சைக்கான ஆக்கப்பூர்வ பணிகளுக்கு செலவழிக்கலாம்.

எனவே அனைத்து வகையான அரசு நிறுவனங்களில் பணி புரிபவர்களுக்கும், இவற்றில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள் ளுக்கும் கொரோனா பேரிடர் கால நிதி வழங்க தடை விதிக்க வேண்டும். ஊரடங்கால் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ள வர்களுக்கு கூடுதலாக ரூ.2 ஆயிரம் நிதி வழங்க உத்தரவிட வேண்டும்" என மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. முடிவில் இது குறித்து தமிழக அரசு "பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்பும்படி" நீதிபதிகள் உத்தர விட்டனர்.

Similar News