மேற்கு வங்காளம்: பா.ஜ.கவின் தேர்தல் வாகனங்களின் மீது TMC தாக்குதல்!

Update: 2021-02-27 11:08 GMT

மேற்கு வங்காளத்தில் வரவிருக்கும் தேர்தலை முன்னிட்டு ஆளும் கட்சியான திரிணமூல் காங்கிரஸ் பல்வேறு தாக்குதல்களை பா.ஜ.க தொண்டர்கள் மீது, தலைவர்கள் மீது தாக்குதலை நடத்தி வருகின்றது. நேற்று வெள்ளிக்கிழமை இரவு பா.ஜ.கவின் குடவுனில் நுழைந்து மற்றும் வாகனங்கள் மேல் TMC தாக்குதல் நடத்தியுள்ளது. இது தொடர்பாகக் கொல்கத்தா காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டுள்ளது.


முதற்கட்ட விசாரணையில், இந்த சம்பவமானது சனிக்கிழமை அதிகாலை நடந்துள்ளதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கொல்கத்தாவில் உள்ள பா.ஜ.கவின் குடவுன்குள் நுழைந்த குற்றவாளிகள் TMC தான் குற்றம் சாட்டியுள்ளது. குற்றவாளிகள் பா.ஜ.கவின் தேர்தல் வாகனங்களைத் தாக்கியது மட்டுமல்லாமல் விலை மதிப்பிற்குரிய பொருட்களைத் திருடிச் சென்றுள்ளனர், என்றும் பா.ஜ.க குற்றம்சாட்டியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாகக் கொல்கத்தா காவல்த் துறையிடம் பா.ஜ.க தலைவர் பிரமோத் சவுத்ரி புகாரளித்துள்ளார். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிக்கையைக் கொல்கத்தா காவல்துறை வெளியிடவில்லை.


மேற்கு வங்காளத்தின் பா.ஜ.க தலைவர் கைலாஷ் விஜய்வர்கியா இந்த சம்பவம் குறித்த வீடீயோவை டிவிட்டரில் பதிவு செய்துள்ளார். அந்த வீடியோவில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் கடப்பாரா பகுதியில் உள்ள பா.ஜ.க குடவுனில் சுற்றிவருவதைக் காண முடிந்தது.

"திரிணமூல் காங்கிரஸ் கும்பல் பா.ஜ.க வின் குடவுனில் துணிச்சலுடன் நுழைந்து LED கார்களை சேதம் செய்து LED களை திருடிச் சென்றுள்ளனர்," என்று குற்றம்சாட்டியுள்ளார். இந்த சம்பவமானது தேர்தல் ஆணையத்திடம் சவால் விடுவதாக உள்ளதாகவும் தெரிவித்தார்.

Similar News