தபால் வாக்குகளில் குளறுபடி.. அமைச்சர் துரைமுருகன் வெற்றியை எதிர்த்து அ.தி.மு.க. வேட்பாளர் வழக்கு.!

தபால் வாக்குகளையும், மின்னணு வாக்குகளையும், மறு எண்ணிக்கை நடத்தவேண்டும் எனவும் கோரியுள்ளார். தற்போது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2021-06-16 03:58 GMT

காட்பாடி தொகுதியில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெற்றியை எதிர்த்து அதிமுக வேட்பாளர் ராமு சார்பில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ள சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடந்து முடிந்துள்ள சட்டமன்றத் தேர்தலில் திமுக சார்பில் காட்பாடி தொகுதியில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் போட்டியிட்டார். நீண்ட இழுபறிக்கு பின்னர் அவர் வெற்றி பெற்றார். தற்போது திமுக அரசில் நீர்பாசனம் மற்றும் கனிம வளத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார்.


 



இந்நிலையில், துரைமுருகனை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் வி.ராமு 745 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தார். வாக்கு எண்ணிக்கை ஆரம்பிக்கப்பட்ட முதல் கடைசி வரை மாற்றி மாற்றி முன்னிலையில் இருந்தனர், இதனிடையே துரைமுருகன் 52,526 வாக்குகள் பெற்றார். அதிமுக வேட்பாளரான ராமு 51,087 வாக்குகள் பெற்றிருந்தார்.

இந்நிலையில், துரைமுருகன் வெற்றி பெற்றதை தொடர்ந்து அதிமுக வேட்பாளர் வி.ராமு தேர்தல் வழக்கு தொடர்ந்துள்ளார். இது குறித்து ராமு அளித்துள்ள மனுவில், தகுதியான வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளது. தேர்தல் நடைமுறைகள் உரிய முறையில் பின்பற்றவில்லை.




 


மேலும், தபால் வாக்குகளையும், மின்னணு வாக்குகளையும், மறு எண்ணிக்கை நடத்தவேண்டும் எனவும் கோரியுள்ளார். தற்போது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு வேலை இந்த வழக்கு நீதிமன்றம் விசாரனைக்கு எடுத்துக்கொண்டால், திமுக அரசுக்கு பெரும் பின்னடைவாகவே பார்க்கப்படும்.

Similar News