அ.தி.மு.க.வுடன் இன்று தே.மு.தி.க. 4ம் கட்ட பேச்சுவார்த்தை தொடங்குகிறது.!

அதிமுக மற்றும் தேமுதிக கூட்டணி பேச்சுவார்த்தையில் இழுபறி ஏற்பட்டுள்ள நிலையில், இன்று மீண்டும் 4ம் கட்ட பேச்சு வார்த்தை தொடங்கப்பட உள்ளது.

Update: 2021-03-03 04:48 GMT

அதிமுக மற்றும் தேமுதிக கூட்டணி பேச்சுவார்த்தையில் இழுபறி ஏற்பட்டுள்ள நிலையில், இன்று மீண்டும் 4ம் கட்ட பேச்சு வார்த்தை தொடங்கப்பட உள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 33 நாட்களே உள்ள நிலையில், அதிமுக, திமுக கட்சிகள் கூட்டணி இறுதி செய்வதில் தீவிரம் காட்டி வருகிறது. அதன்படி அதிமுக கூட்டணியில் முதல் ஆளாக பாமக இணைந்துள்ளது. அவர்களுக்கு 23 சட்டமன்ற தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.


 



அதே போன்று பாஜக உடன் நடத்திய பேச்சு வார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதாக கூறப்படுகிறது.

இதனிடையே மீதம் இருப்பது தேமுதிகதான். அந்த கட்சியுடன் அதிமுக தலைமை கடந்த மூன்று கட்ட பேச்சு வார்த்தையை நடத்தியுள்ளது. ஆனால் அவர்கள் உடன்படவில்லை. தங்களுக்கும் பாமகவிற்கு ஒதுக்கிய அளவிற்கு தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்று முரண்டு பிடித்து வருகின்றனர். இதனால் கூட்டணியை இறுதி செய்வதில் காலதாமதம் ஏற்பட்டது.


 



இந்நிலையில், தொகுதி பங்கீடு தொடர்பாக சென்னையில் இன்று அதிமுகவுடன் மீண்டும் தேமுதிக பேச்சுவார்த்தை நடத்துகிறது. 3ம் கட்ட பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படாத நிலையில் நான்காம் கட்ட பேச்சுவார்த்தை இன்று நடத்தப்படுகிறது. இதில் தேமுதிகவிற்கு 15 முதல் 20 தொகுதிகள் ஒதுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Similar News