அழகிரியின் சென்னை விஜயம் - ரஜினியா? தி.மு.கவா? அழகிரியின் முடிவு என்ன?

அழகிரியின் சென்னை விஜயம் - ரஜினியா? தி.மு.கவா? அழகிரியின் முடிவு என்ன?

Update: 2020-12-21 13:06 GMT

தமிழக சட்ட மன்ற தேர்தல் இன்னும் 5 மாதங்களில் தமிழகத்தில் நடைபெற உள்ள நிலையில் தமிழக அரசியில் பல மாற்றங்கள் நிகழ உள்ளன. மேலும் வரும் தேர்தலில் ஆட்சியை பிடிப்பதற்கு பல முனை போட்டிகள் ஏற்பட்டுள்ள நிலையில் தி.மு.கவின் மறைந்த தலைவர் கருணாநிதி'யின் மூத்த மகனும் தற்போதைய தி.மு.க தலைவர் ஸ்டாலினின் உடன் பிறந்த சகோதருமாகிய மு.க.அழகிரி'யின் அரசியல் மறுபிரவேச விஜயம் தொடர்பாக பல்வேறு செய்திகளும், யூகங்களும் நிலவி வந்த நிலையில். தற்போழுது அழகிரி அவர்கள் சென்னை வந்துள்ளார்.

இந்த சென்னை பயணம் திடீரென ஏற்பாடு செய்யப்பட்டதாக அழகிரி தரப்பில் இருந்து கூறப்படுகிறது. மேலும் இந்த பயணமானது தி.மு.க தரப்பில் இருந்து ஏதும் அழைப்பு வராமல் தி.மு.க'வில் மீண்டும் இணைவது குறித்த முடிவை அழகிரி எடுப்பது தொடர்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அழகிரி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இனி தி.மு.க'வில் இணைவது சாத்தியப்படாது என அழகிரி உணர்ந்தால் திரு.ரஜினிகாந்த் அவர்களின் கட்சியில் கூட்டணியாக இணைய உள்ளதாகவும் அழகிரி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் திரு.ரஜினிகாந்த் அவர்கள் தற்பொழுது 'அண்ணாத்த' படப்பிடிப்பில் இருந்தாலும் வரும் டிசம்பர் இறுதியில் தனது கட்சி பற்றிய அறிவிப்பை வெளியிட தயார் நிலையில் தனது மக்கள் மன்ற பணிகளை முடுக்கிவிட்டு சென்றிருக்கிறார். எனவே அழகிரி'யின் இந்த சென்னை விஜயத்தில் ஒன்று தி.மு.க'வில் இணைவது தொடர்பான இறுதி முடிவு அல்லது திரு.ரஜினி அவர்களுடனான கூட்டணி என தனது நிலைப்பாட்டை பற்றி முடிவு எடுக்க வாய்ப்புகள் உள்ளதாகவே அழகிரி தரப்பு தெரிவித்துள்ளது.

Similar News