கேள்வி குறியாகும் அரசு பள்ளி மேற்கூரைகள், கார் ரேஸ் வேண்டும் என அடம்பிடிக்கும் உதயநிதி!

Update: 2024-08-27 12:59 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே அமைந்துள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் மொத்தம் 400க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் அப்பள்ளியில் படிக்கும் பதினொன்றாம் வகுப்பு மாணவர்கள் மூன்று பேர் வகுப்புகள் துவங்குவதற்கு முன்பாகவே தன் வகுப்பறைக்கு சென்று படித்துக் கொண்டிருந்தனர் அப்பொழுது திடீரென்று பள்ளியின் மேற்கூரை இடிந்து விழுந்து வகுப்பில் அமர்ந்து கொண்டிருந்த மாணவர்கள் மீது விழுந்து படுகாயம் ஏற்பட்டுள்ளது. காயமடைந்த மூன்று மாணவர்களையும் பள்ளி தலைமை ஆசிரியர் உடனடியாக அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்துள்ளார். இதனை அடுத்து அந்த விபத்து குறித்து காவல்துறையினர் அப்பள்ளியில் ஆய்வுகளை செய்து வருகின்றனர். 

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளியில் இது போன்று சுவர் இடிந்து விழுந்து மாணவர்கள் படுகாயம் அடைவது புதிதாக நடக்கின்ற விஷயம் இல்லை! தொடர்ச்சியாக நடந்த வண்ணமே உள்ளது, அதிலும் குறிப்பாக கடந்த மூன்று வருடங்களில் இந்த சம்பவம் அதிகமாக நடந்து வருவதும் பெற்றோர்கள் மத்தியிலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இப்படி தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளின் நிலைமை உள்ள நிலையில் தமிழக முதல்வரின் மகனான அமைச்சர் உதயநிதி சென்னையில் கார் ரேஸ் நடத்தியே தீர வேண்டும் என்று ஒரே பிடிவாதமாக நிற்கிறார். 

இதற்கு பல தரப்பில் விமர்சனங்களும் எழுந்து வருகிறது. அது மட்டும் இன்றி பிரபல அரசியல் விமர்சகராக உள்ள மாரிதாஸ், இந்த கார் ரேசினால் தமிழக மக்களுக்கு எந்த பிரயோஜனமும் கிடையாது. நடிகையான நிவேதா பெத்துராஜை திருப்திப்படுத்துவதற்காக தான் உதயநிதி மக்களின் வரிப்பணத்தை வீணடிக்கிறார் என்று குற்றம் சாடியுள்ளார். தமிழகத்தில் அரசு பள்ளிகளின் நிலைமை மட்டும் இன்றி அரசு பேருந்துகளின் நிலைமையும் படுமோசமாக உள்ளது. இந்த இரண்டுமே என்று மாறப்போகிறது? மக்களுக்கு தரமான சேவைகளை செய்யப்போகிறது? என்பது தற்போது அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாக மாறி உள்ளது. 

Tags:    

Similar News