தி.மு.க அரசு 10 சதவீத பேருந்துகளை கூட வாங்கவில்லை.. RTI கொடுத்த அதிர்ச்சி தகவல்..

Update: 2024-08-28 08:43 GMT

2021 ஆம் ஆண்டு முதல் தமிழகத்தில் திமுக தலைமையிலான அரசு நடைபெற்று வருகிறது. சட்டசபை தேர்தலின் போது பிரச்சாரங்களில் திமுகவின் முக்கிய வாக்குறுதி ஆன இருந்த மகளிர் காண இலவச பேருந்து பயணத் திட்டம் வெகுவாக பெண்களைக் கவர்ந்தது. ஆட்சிக் கட்டிலில் அமர்ந்த பிறகு திமுக மகளிருக்கு இலவச பேருந்து பயணத் திட்டத்தை அறிவித்தது. ஆனால் அதில் முழுமையாக பெண்கள் பயன்படுத்த முடிந்ததா? என்று கேட்டால் பல இடங்களிலும் பல சூழ்நிலைகளையும் அவர்கள் தங்களுடைய தன்மானத்தை விட்டுக் கொடுக்க வேண்டிய ஒரு சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள்.


ஏனென்றால் இந்த ஒரு திட்டத்திற்கு பிறகு போக்குவரத்து கழகம் மிகப் பெரும் நஷ்டத்தை சந்தித்தது இதன் காரணமாக பல்வேறு பேருந்துகளை சரி செய்யாமலும் புதிய பேருந்துகளை வாங்காமலும் வெறும் அறிக்கையாக மட்டும் பல்வேறு விளம்பரங்களை கொடுத்து வந்தார்கள். இதில் குறிப்பாக 2022-2023 2213 டீசல் பேருந்துகளும், 500 மின்சார பேருந்துகளும், 2023-2024 1,000 புதிய பேருந்துகளும், 2024-2025 ஆம் ஆண்டில் 300 டீசல் பேருந்துகளும், 500 மின்சார பேருந்துகளும் கொள்முதல் செய்யப்படும் என்று தமிழக அரசு தன்னுடைய பட்ஜெட்டில் அறிவித்தது.


ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட 1000 புதிய பேருந்துகளை கொள்முதல் செய்வதாக பட்ஜெட்டில் அறிவித்த தமிழக அரசு கடந்த மூன்று ஆண்டுகளில் மொத்தமாக 892 பேருந்துகளை மட்டும் தான் தற்போது வரை கொள்முதல் செய்து இருக்கிறது. இதில் மற்றொரு விஷயம் என்னவென்றால் தற்போது வரை அவர்கள் கடந்த மூன்று ஆண்டுகளில் ஒரு மின்சார பேருந்துகளை கூட வாங்கவில்லை கொள்முதல் செய்யப்படவில்லை என்பது பெரும் குற்றச்சாட்டாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கீழ் வெளி வந்து இருக்கிறது.

Input & Image courtesy:News

Tags:    

Similar News