தமிழக பா.ஜ.கவில் ஆறு பேர் கொண்ட ஒருங்கிணைப்பு குழு அமைப்பு.. ஏன் தெரியுமா?

Update: 2024-08-31 14:29 GMT

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அவர்கள் தன் அரசியல் ரீதியான மேற்படிப்பிற்காக வெளிநாடு சென்றுள்ள நிலையில், H.ராஜா தலைமையில் ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் பிரிட்டனில் உள்ள ஆக்ஸ்போா்டு பல்கலைக்கழகத்தில் ஃபெல்லோஷிப் படிப்புக்காக லண்டன் சென்றுள்ளார். அவர் லண்டனில் மூன்று மாதங்கள் தங்கிப் படிக்கவுள்ளார். அவர் இல்லாத நிலையில், பாஜக தேசிய தலைவர் ஜகத் பிரகாஷ் நட்டாவின் வழிகாட்டுதலின் பேரில் ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.


இதில் தமிழக பாஜக கட்சிப் பணிகளை மேற்கொள்ள, H. ராஜா தலைமையில் ஆறு பேர் கொண்ட ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக பாஜக தேசிய பொதுச் செயலாளர் அருண் சிங் தெரிவித்துள்ளார். இக்குழுவில் மாநில துணைத் தலைவர்கள் எம். சக்கரவர்த்தி, பி. கனகசபாபதி, மாநில பொதுச் செயலாளர்கள் எம். முருகானந்தம், பேராசிரியர் ராம ஸ்ரீனிவாசன், பொருளாளர் எஸ். ஆர். சேகர் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.

மேலும் மூன்று மாத காலத்திற்கு இந்த ஒருங்கிணைப்புக் குழுவானது மாநில மையக்குழுவுடன் கலந்து ஆலோசித்து கட்சியின் செயல்பாடுகள் குறித்து முக்கிய முடிவுகளை எடுக்கும். மேலும் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர்களுக்கு அனைவரும் தங்களுடைய வாழ்த்துக்களை தொடர்ச்சியான வண்ணம் தெரிவித்து வருகிறார்.

Input & Image courtesy: News

Tags:    

Similar News