தி.மு.க. அரசு எப்போது பெட்ரோல் விலையை குறைக்கும்.. அன்புமணி ராமதாஸ் கேள்வி.!

தமிழகத்தில் திமுக அரசு அமைந்த பின்னர் மத்திய அரசை ஒன்றிய அரசு என கூறுவதற்கு பாஜக, மற்றும் பிற கட்சிகளின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Update: 2021-07-05 13:19 GMT

தமிழகத்தில் திமுக அரசு அமைந்த பின்னர் மத்திய அரசை ஒன்றிய அரசு என கூறுவதற்கு பாஜக, மற்றும் பிற கட்சிகளின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் வெளிப்படையாக ஒன்றிய அரசு என சொல்வது தவறு இல்லை என கூறினார். இவரது கருத்து இந்தியாவை துண்டாடும் செயல் என அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகிறது. 


இந்நிலையில், பாமக நிழல் நிதிநிலை அறிக்கை இன்று வெளியிடப்பட்டது. இதில் பாமக தலைவர் ஜி.கே.மணி அக்கட்சியின் இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ், கட்சியின் நிறுவனர் ராமதாஸ் காணொளி காட்சி மூலமாக பங்கேற்றார். இதனையடுத்து அன்புமணி ராமதாஸ் பேசுகையில், எங்களைப் பொறுத்தவரையில் மத்திய அரசு என்றுதான அழைப்போம். பெயரை மாற்றி கூறுவதால் எதுவம் நடக்கப்போவதில்லை.

மேலும், திமுக ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல், டீசல் விலையை குறைப்பதாக கூறினார். ஆனால் தற்போது தேதி சொல்லவில்லை எனக் கூறுகின்றனர். அது ஆக்கப்பூர்வமான கருத்தாக அமையாது. தற்போதைய சூழலில் இரண்டு ரூபாய் வரை குறைக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.

Similar News