அருந்ததியர் வீட்டில் 'டீ' போட்டு குடித்து மகிழ்ந்த அண்ணாமலை!

அரவக்குறிச்சி தொகுதி முழுவதும் அனைத்து தரப்பு மக்களையும் அண்ணாமலை தனது கட்சி நிர்வாகிகளுடன் சென்று தாமரைக்கு வாக்கு சேகரித்து வருகிறார். அவர் செல்லும் இடமெல்லாம் மக்கள் அமோக ஆதரவு அளித்து வருகின்றனர்.

Update: 2021-04-03 06:44 GMT

தமிழக பாஜக துணைத்தலைவரும், அரவக்குறிச்சி தொகுதியின் பாஜக வேட்பாளருமான அண்ணாமலை, அருந்ததியர் வீட்டில் டீ போட்டு குடித்து மகிழ்ந்துள்ளார்.

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் பாஜக வேட்பாளராக அண்ணாமலை போட்டியிடுகிறார். அவருக்கு எதிராக திமுகவினர் பல பொய் பரப்புரையை செய்து வருகின்றனர். ஆனாலும் அண்ணாமலைக்கு பெருகும் ஆதரவை தடுக்க முடியாமல் திணறி வருகின்றனர்


அரவக்குறிச்சி தொகுதி முழுவதும் அனைத்து தரப்பு மக்களையும் அண்ணாமலை தனது கட்சி நிர்வாகிகளுடன் சென்று தாமரைக்கு வாக்கு சேகரித்து வருகிறார். அவர் செல்லும் இடமெல்லாம் மக்கள் அமோக ஆதரவு அளித்து வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று அரவக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட கிராமங்களில் அவர் பிரச்சாரம் செய்து பேசியதாவது: திமுக சமூக நீதி பற்றி பேசி வருகிறது. அங்கு ஆதிதிராவிடர்களை சேர்ந்தவர்கள் எத்தனை பேர் மாவட்ட செயலாளராக உள்ளனர் சொல்லுங்கள் என்றார். மேலும், அருந்ததியர் சமுதாயத்தை சேர்ந்த முருகன் பாஜகவின் மாநில தலைவராக உள்ளார். இதுதான் சமூக நீதியாகும்.


திமுக போட்டியிடும் 174 தொகுதிகளில் ஒரு இஸ்லாமியர்களுக்கு கூட இடம் தரவில்லை. பின்பு எப்படி திமுகவினர் சமூக நீதி பற்றி பேசி வருகின்றனர் என கேள்வி எழுப்பினர்.


இந்நிலையில், பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த வேலையில் நேற்று இரவு அண்ணாமலை, அருந்ததியர் காலனியில் உள்ள மக்களுடன் சென்று கலந்துரையாடினார். இதன் பின்னர் பின்னர் காலனியில் வசித்து வரும் பாலு, செல்வி என்ற குடும்பத்தினரை சந்தித்தார். அவருடைய வீட்டில் இரவு சாப்பிட்டார். இதனையடுத்து பாலு செல்வி வீட்டு சமையல் அறைக்கு சென்று அண்ணாமலையே டீ போட்டு, குடும்பத்தாருக்கும் கொடுத்து தானும் குடித்தார்.


அவரது சேவைக்கு பலரும் பாராட்டுக்கள் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக அருந்ததியினர் மக்களிடையே அண்ணாமலைக்கு ஆதரவு பெருகி வருகிறது.

Similar News