முதலமைச்சர் ஸ்டாலின்தான் மாணவர்களை மீட்டார்: வாய் கூசாமல் பச்சை பொய் சொல்லும் அமைச்சர் மஸ்தான்!

உக்ரைன் நாட்டில் சிக்கியுள்ள இந்திய மாணவர்கள் 240 பேர் ஹங்கேரி நாட்டில் உள்ள புதாபெஸ்டுவில் இருந்து நேற்று புறப்பட்ட 3வது விமானம் இன்று (பிப்ரவரி 27) காலை டெல்லிக்கு வந்தடைந்தது.

Update: 2022-02-27 09:26 GMT

உக்ரைன் நாட்டில் சிக்கியுள்ள இந்திய மாணவர்கள் 240 பேர் ஹங்கேரி நாட்டில் உள்ள புதாபெஸ்டுவில் இருந்து நேற்று புறப்பட்ட 3வது விமானம் இன்று (பிப்ரவரி 27) காலை டெல்லிக்கு வந்தடைந்தது. இதற்கு ஆப்ரேஷன் கங்கா என்று மத்திய அரசு பெயரிட்டுள்ளது. அதன்படி உக்ரைன் நாட்டில் ரஷ்யா போர் தொடுத்து வரும் நிலையில், இந்தியர்களை பாதுகாப்பாக மீட்பதற்கு அனைத்து வழிகளையும் மத்திய அரசு கையாண்டு வருகிறது. அதில் முதற் கட்டமாக தரை மார்க்கமாக அண்டை நாடுகளுக்கு நகர்த்தி அங்கிருந்து விமானம் மூலமாக இந்தியாவுக்கு அழைத்து வரப்படுகின்றனர்.

அதன்டி டெல்லிக்கு வந்த மாணவர்களில் 5 தமிழக மாணவர்கள் விமானம் மூலம் சென்னைக்கு வந்தடைந்தனர். அவர்களை அமைச்சர் மஸ்தான் வரவேற்றார். அப்போது அங்கிருந்த செய்தியாளர்களிடம் பேசிய சம்பவம்தான் அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.

அதாவது முதலமைச்சர் ஸ்டாலின்தான் உக்ரைனில் இருந்தவர்களை மீட்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டார் என்று கூறினார். ஏற்கனவே திமுக மத்திய அரசு திட்டத்தினை ஸ்டிக்கர் ஒட்டி வருவது அனைவரும் அறிந்ததே. தற்போது பிரதமர் மோடி ரஷ்யா மற்றும் உக்ரைன், உள்ளிட்ட நாடுகளிடம் பேசி அங்குள்ள மாணவர்களையும், இந்தியர்களையும் பத்திரமாக மீட்டு வருகின்றார். ஆனால் திமுகவில் உள்ளவர்கள் இப்படி வாய் கூசாமல் பொய் சொல்லி வருவது அனைவரும் அறிந்ததே. இது போன்ற பொய்களை சொல்வதில் திமுகவினர் சலைத்தவர்கள் அல்ல என்பதற்கு மஸ்தான் பேசியதை பார்த்தாலே தெரியும்.

Source: Daily Thanthi

Image Courtesy: Twiter

Tags:    

Similar News