ஓட்டுக்கு பணம் கொடுக்கணும்.. ரூ.46 கோடி வங்கியில் கடன் கேட்ட சுயேச்சை வேட்பாளர்.!

அந்த மனுவில், நாமக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் அனைவரும் வாக்களிப்பதை உறுதி செய்யும் வகையிலும் வாக்காளர்களுக்கு தலா 2 ஆயிரம் ரூபாய் ஊக்க தொகையாக வழங்க வேண்டும்.

Update: 2021-03-23 13:22 GMT

நாமக்கல்லில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர், ஓட்டுக்கு பணம் கொடுக்க, வங்கியில் ரூ.46 கோடி கடன் கேட்ட சம்பவம் வங்கி மேனேஜர் அதிர்ச்சியடைய செய்துள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இதற்காக அனைத்து வேட்பாளர்களும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.




 


இந்நிலையில், நாமக்கல் சட்டமன்ற தொகுதியில் சுயேச்சையாக ரமேஷ் என்பவர் போட்டியிடுகிறார். அவருக்கு ஒதுக்கப்பட்ட சின்னமான கிரிக்கெட் பேட் மற்றும் ஹெல்மெட்டுடன் நாமக்கல் டாக்டர் சங்கரன் சாலையில் உள்ள எஸ்.பி.ஐ வங்கிக்கு சென்று வங்கி மேலாளரிடம் மனு ஒன்றை அளித்துள்ளார்.

அந்த மனுவில், நாமக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் அனைவரும் வாக்களிப்பதை உறுதி செய்யும் வகையிலும் வாக்காளர்களுக்கு தலா 2 ஆயிரம் ரூபாய் ஊக்க தொகையாக வழங்க வேண்டும். எனவே தனக்கு வெறும் 46 கோடி ரூபாய் மட்டும் மானியத்துடன் கடன் வழங்க வேண்டும் என்றும், அதனை தனது வாக்காளர் அடையாள அட்டையை வைத்துக் கொண்டு, உடனடியாக வழங்க வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.




 


இதனை படித்த வங்கி மேலாளர் அதிர்ச்சியடைந்தார். பின்னர் இது தொடர்பாக உயர் அதிகாரிகளிடம் பேசி முடிவு எடுப்பதாக வங்கி மேலாளர் தெரிவித்துள்ளார். வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதற்காக வங்கியில் கடன் கேட்ட சம்பவம் நாமக்கல் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Similar News