கொடநாடு விவகாரத்தில் அ.தி.மு.க.வினர் மீது தவறு இல்லை ! - பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை !
இந்திய விடுதலைப் போராட்ட வீரர் ஒண்டிவீரன் நினைவு நாளை முன்னிட்டு, நெல்லை மாவட்டத்தில் உள்ள ஒண்டிவீரன் மணிமண்டபத்தில் அஞ்சலி செலுத்துவதற்காக மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை மற்றும் மீன்வளத்துறை இணை அமைச்சர் எல்.முருகன் மற்றும் தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை ஆகியோர் விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வந்தனர்.
திமுகவின் 100 நாள் ஆட்சி என்பது இனிப்பு, கசப்பு, காரம் என தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார்.
இந்திய விடுதலைப் போராட்ட வீரர் ஒண்டிவீரன் நினைவு நாளை முன்னிட்டு, நெல்லை மாவட்டத்தில் உள்ள ஒண்டிவீரன் மணிமண்டபத்தில் அஞ்சலி செலுத்துவதற்காக மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை மற்றும் மீன்வளத்துறை இணை அமைச்சர் எல்.முருகன் மற்றும் தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை ஆகியோர் விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வந்தனர்.
அப்போது விமான நிலையத்தில் பாஜக சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து பாஜக தலைவர் கே.அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது: புதிதாக பொறுப்பேற்ற அரசுக்கு 6 மாதம் காலம் அவகாசம் அளிக்கப்பட வேண்டும் என்பது மரபு. இருந்த போதிலும் திமுக அரசின் 100 நாள் ஆட்சி என்பது கொஞ்சம் இனிப்பு, நிறைய கசப்பு மற்றும் காரம் போன்றவை ஆகும்.
இனிப்பு என்பது மத்திய அரசுடன் இணைந்து இரண்டாம் அலை கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தியுள்ளது. கசப்பு என்பது ஒன்றிய அரசிடமிருந்து ஆரம்பித்து பல விஷயங்களை பேசி வருகின்றனர்.
தமிழகத்தில் பல இடங்களில் பாஜக தொண்டர்களையும் கைது செய்துள்ளனர். மேலும், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரண வழக்கு விசாரணை என்பது முடித்து வைக்கப்பட்ட ஒன்று. அரசியலுக்காக அந்த வழக்கை திமுக கையிலெடுக்கிறது என தோன்றுகிறது.
இதனை அனைத்தும் முதலமைச்சர் ஸ்டாலின் விட்டுவிட்டு, கொரோனா மூன்றாம் அலையை தடுப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும். இந்திய அளவில் கொரோனா தடுப்பூசி 54 கோடி பேருக்கு மேல் போடப்பட்டுள்ளது. அதே போன்று தமிழகத்தில் 2.5 கோடி பேருக்கு மேல் போடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.