முதலமைச்சர் தாய் குறித்து தி.மு.க. ராசா அவதூறு பேச்சு: குஷ்பு கண்டனம்.!

ஆயிரம் விளக்கு தொகுதியின் பாஜக வேட்பாளர் குஷ்பு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறித்து ராசா பேசியது என்னால் நம்ப முடியவில்லை, அவர் பேசியதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

Update: 2021-03-27 08:20 GMT

தமிழக சட்டமன்ற தேர்தலில் நட்சத்திர தொகுதியாக சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி மாறியுள்ளது. சினிமாவின் உச்ச நட்சத்திரமாக உள்ள குஷ்பு பாஜக சார்பில் போட்டியிடுகிறார்.

திமுக சார்பில் எழிலன் போட்டியிடுகிறார். அந்த தொகுதி திமுகவின் கோட்டையாக கருதப்பட்டது. ஆனால் தற்போது பாஜக வேட்பாளர் குஷ்பு தொகுதி முழுவதும் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இதனால் கள நிலவரம் மாறத்தொடங்கியுள்ளது. குஷ்புவே இந்த முறை வெற்றி பெறுவார் என்று சொல்லப்படுகிறது.

இந்நிலையில், திமுக துணைப் பொதுச்செயலாளரும் எம்.பி.யுமான ராசா, சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் திமுக வேட்பாளர் எழிலனை ஆதரித்து தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது முதலமைச்சர் தாயாரை குறித்து மிகவும் கீழ்த்தரமான முறையில் விமர்சனம் செய்தார். அவரது பேச்சு திமுகவினர் மட்டுமின்றி ஒட்டுமொத்த பெண்களையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.




 


அரசியல் நாகரீகம் கருதி பேசாமல் இப்படி பேசியுள்ளாரே என்று கனிமொழியே கண்டனம் தெரிவித்துள்ளார். இதற்கு அதிமுக சார்பில் ராசா மீது தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அவர் பிரச்சாரத்திற்கு தடை விதிக்க வேண்டும் எனவும் தங்களது மனுவில் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், ஆயிரம் விளக்கு தொகுதியின் பாஜக வேட்பாளர் குஷ்பு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறித்து ராசா பேசியது என்னால் நம்ப முடியவில்லை, அவர் பேசியதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

ராசாவின் பேச்சால் கொங்கு மண்டலத்தில் உள்ள திமுக வேட்பாளர்கள் அதிர்ந்து போய் உள்ளனர். வாக்கு சேகரிக்க செல்லும் இடங்களில் கொங்கு வேளாளக்கவுண்டர் மக்கள் மிகவும் கோபத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.

Similar News